Monthly Archive: December 2016

வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது… (READ MORE)

Uncategorized

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித்… (READ MORE)

Uncategorized

வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள்.  “பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க… (READ MORE)

Uncategorized

அறுபதாங்கோழி…!

​என்ன ஏது என்று உணர்வதற்குள் சில அரிய விஷயங்கள் நடந்தேறி முடிந்து விடுகின்றன. முக்கியத்துவம் உணர்ந்த பிறகு திரும்ப அந்தக் கணங்களுக்கு போகவோ, ‘ரீவைண்டு’ பண்ணியோ வாழ முடிவதில்லை. பறம்பு மலைக் காட்டுச் சரிவில் கொற்றவை கூற்றின் போது  ஈச்சங்கள்ளுக்கு ஏதுவாக இருக்குமென்று கபிலருக்கு தர வேண்டுமென்று அந்நிலத்தையாண்ட தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை… (READ MORE)

Uncategorized

அழகான விஷயங்களை…

​மனதைக் கவரும் அழகான விஷயங்கள் சிலவற்றை தூரயிருந்து பார்ப்பதே சிறந்தது. இறங்கித் தொடும் அனுபவம் உயிருக்கே ஆபத்தாய் முடியும். சென்னை நோக்கிப் பயணிக்கும் என் விமானத்திற்கே வெளியே வென் பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டம்!  😜 #வணக்கம் சென்னை!  Facebook.com/ParamanPage

Uncategorized

அதிர வைக்கும் எளிய  மனிதர்கள்… 

வாழ்க்கை ‘எதனால்?’ என்று அறுதியிட்டுக் கூற முடியாத அவிழ்க்க முடியா பல புதிர் முடிச்சுக்களைக் கொண்டது. எல்லாம் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த நிலை? ஒன்றுமே இல்லாத இவர்களுக்கு ஏன் இந்த உச்சம்? போன்ற கேள்விகளுக்கு ‘இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம்’ போன்ற யூகங்களைக் கடந்த ‘இதுதான்!’ என்ற நிச்சயமான உண்மையான பதில் காணமுடிவதில்லை என்பதே… (READ MORE)

Uncategorized

நாசகார புயலே வர்தா, நாங்கள் எழுகிறோம் இதோ!

​ மரங்கள் என்றால் இலையும் கிளையும் வான் பக்கம்,  வேரும் தண்டும் பூமிப் பக்கம் என்றல்லவா கொண்டிருக்கும்? வேர்களை வானுக்குக் காட்டி இலைகளை தரையில் பரப்பி கிளைகள் ஒடிந்து சரிந்து வீழ்ந்து கிடக்கின்றனவே எம்மரங்கள்! ஐயோ! என்னவாயிற்று என் நகருக்கு, அனுமன் புகுந்த அசோகவனமாய் குதறப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கிறதே என் சென்னை! மேகத்திலிருந்து மழையைத்தானே கேட்டோம்,… (READ MORE)

Uncategorized

காட்டிலிருந்து…

​ஒரு காலத்தில் விலங்குகள் அதிகம் திரிந்த அதிகம் வேட்டையாடப்பட்ட காட்டுப் பகுதியாயிருந்து, வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதியாய் மாறி ‘வேட்டைக்காரன்புதூர்’ என்றான பகுதிக்கும் டாப்ஸ்லிப்பிற்கும் இடையில் இருக்கிறேன். நேற்றிரவு காட்டுக்குள் இங்கிருப்போர் துணையோடு வண்டியெடுத்துக் கொண்டு போனதில், கண்களில் அதிகம் மாட்டாத கருஞ்சிறுத்தைகள் இரண்டை பார்க்கும் பெரும் வாய்ப்பு கிட்டியது. மின்னும் கண்களை வைத்து… (READ MORE)

Uncategorized

ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்… அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு! #கண்மருத்துவமனை  :பரமன் பச்சைமுத்து சென்னை 07.12.2016 Www.ParamanIn.com

பொரி கடலை

,

jaya

மக்களின் ‘அம்மா’விற்கு மலரஞ்சலி…

நானும் இருக்கிறேன் என்று வாழ்வது வாழ்க்கையல்ல; இருக்குமிடத்தில் நான் தனியாகத் தெரிவேன் என்று தடம் பதித்து வாழ்வது வாழ்க்கை. அதில் இதில் என்றில்லை எதில் இருந்தாலும் தடம் பதித்து தலை திருப்பிப் பார்க்கச் செய்வேன் என்று வாழ்வது தலை வாழ்க்கை. எப்போது வந்தோம் எப்போது போனோம் என்பதைத் தாண்டி எத்தனை பேர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்… (READ MORE)

Politics

,

nathi-5

நதி போல ஓடிக்கொண்டிரு… 

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள். ‘நான்… நான்… நான்தான்!’ என்றே… (READ MORE)

Media Published, Self Help

man

அனுபவங்களால் ஆனவன் மனிதன்

வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது. ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால்… (READ MORE)

பொரி கடலை

,

e

எழுத்து என்பது…

எழுத்து என்பது நாம் எழுதி வருவதில்லை. அது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எழுதுபவனின் உள்மன அடுக்குகளில் படிந்திருக்கும் துகள்களை பூசிக்கொண்டு அது வெளி வருகிறது. இடம், நிலை, சுற்றுச்சூழல், காலம் என எதுவும் உண்மையில் அதைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதை வெளிப்பட வைக்கும் ஒத்த ஓர் அலைவரிசையில் உள்ளம் இருக்கும் தருணங்களில்… (READ MORE)

பொரி கடலை

பொள்ளாச்சி

மழை வந்தால் பனி இருக்காது என்பது மற்ற ஊர்களுக்கு எப்படியோ, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு அது பொருந்தாது போல. நகரில் இறங்கும்போது ‘நேத்து முச்சூடும் பேஞ்சுதுங்க!’ என்று யாரோ சொன்னதை நம்பமுடியவில்லை. ‘சூரியன் வரட்டும், அப்புறம் போறேன் நான்!’ என்பதுபோல இறங்கி அப்படியே நகரின் மேலேயே நிற்கிறது பனி, ‘இப்போதைக்கு நான் வர்றதா இல்லையே!’… (READ MORE)

பொரி கடலை