கவிதை

wp-1668487305219.jpg

வாட்ஸ்ஆப் வொண்டர்ஸ்!

நாளெல்லாம் கடும் வேலஅந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன் காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாருநடுராத்திரியில க்ரூப் ஒண்ணு அவராவே முடிவெடுத்துஅல்லாரையும் சேத்தாரு ஆரோடயோ சண்டையாம்அவராவே போய்ட்டாரு வெளிய காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் என்ன க்ரூப்புஎதுக்கு இந்த க்ரூப்பு எதுவும் தெரியலஎவர்ட்ட கேப்பேன்! ‘ஐயா!  யாருய்யா  நீங்கல்லாம்?’ – பரமன் பச்சைமுத்துமணக்குடி15.11.2022 #Paraman… (READ MORE)

ஆ...!, கவிதை

நாளை தேவைப்படுமென்று அளவுக்கு மிகுதியை இன்று பூமியில் ஊற்றி முதலீடுசெய்கிறதா மேகம்? நேற்று மேகவங்கியில் முதலீடு செய்ததில் இன்று அறுவடை மொண்டு குளிக்கிறதா பூமி? அடித்து இடித்துப் பெய்கிறது மழை! – பரமன் பச்சைமுத்து03.11.2022 #Rain #ChennaiRain #Paraman #ParamanPachaimuthu #ParamanOnRain #rainyday #rainyseason

ஆ...!, கவிதை

,

அவரவர்க்கான வால்

ஆட்டுக்கும் வாலை அளந்து கொடுத்தான் ஆண்டவன் அவரவர்க்கான வால் அவரவர் விழாமல் தகவு நிலை கொளவே அடுத்தவர் மூஞ்சியில் மூக்கினுள் விட அல்லவே தன்னிலை தடுமாறாமல் தடுக்கத் தந்த வாலை அடுத்தவர் நிலை மாற்றி தள்ள நீட்டினால் அறுத்தெறிவான் ஆண்டவனென்னும் ஆகச் சிறந்த அறுவை நிபுணன் அடுத்தவன் வாலில் நெருப்பு வைத்ததால் அழிந்தது தென்னிலங்கை அவரவர்… (READ MORE)

ஆ...!, கவிதை

ஆம் ஆத்மியின் சின்னமோ

ஹாரி பார்ட்டரின்துடைப்பமோ பஞ்சாபில் வென்றஆம் ஆத்மியின் சின்னமோ குனிந்து நிற்கும்முள்ளம்பன்றியின் முதுகோ சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்தஉள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்! வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ! 樂 – பரமன் ( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு… (READ MORE)

ஆ...!, கவிதை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

wp-1639876840741.jpg

‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

எவ்வளவு இருந்திருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்!’ என்று நினைப்பதுதானே மனித மனசு! இதுதான் அந்தக் கணம் இப்படியொரு கணம் வாய்க்காது இனி என்று முக்கிய கணங்களில் எவரேனும் சொல்லியிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பேனே என எவ்வளவு வாழ்ந்த போதும் வழுக்கி விழுகிறது மனம் வாழ்வதும், வாழ்ந்த கணங்களை எண்ணி வாழ்வதும் தொடர்ந்து மேலே வாழ்வதும்தானே வாழ்க்கை…. (READ MORE)

கவிதை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

சத்தம்

அருகிலுள்ள ஏதோவொரு வீட்டிலிருத்து முகந்தெரியா மனிதரொருவர் ‘ஆ…’வென்று செய்யும் யோகா உச்சாடனம் பக்கத்து மனை கிணற்றடியில்வேலைக்கார பாட்டியம்மா பாத்திரம் கழுவையில் எழும்‘களங் ப்ளங் டங்’ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே பக்கத்து வீட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் சொல்லும், ‘ஆங்… நான் பாத்துக்கறேன். போங்க!’ பலகணிக்கு வெளியே சோறு வைக்கப்பட்டதும் உற்சாகத்தில் தன் இனத்தை அழைக்க காகம்… (READ MORE)

ஆ...!, கவிதை

புத்தர் சிரிக்கிறார்…

புத்தர் சிரிக்கிறார்,சிலுவையிலறையப்பட்ட ஏசு கிறிஸ்துவுக்கும்பௌத்தம் தந்த புத்த பகவானுக்கும்பூமாலை சூட்டி ஆயுதபூசை பொட்டிட்டதொழிலாளியின் வெள்ளந்தி மனம் கண்டு! – பரமன் பச்சைமுத்து15.10.2021 #AyuthaPoojai#Paraman

கவிதை

மகள்கள் ஓர் அதிசயம்…

மகள்கள் ஓர் அதிசயம்… மாதாவுக்காக மாறாதவனும்மனைவிக்காக மாறாதவனும்மகள்களுக்காக மாறிவிடுகிறான்! – பரமன் பச்சைமுத்து22.06.2021பெரும்பாக்கம் #Children#LoveForChildren#Parenting#Daughters#Magal Facebook.com/ParamanPage

கவிதை

, , , , , , ,

wp-1623298858256.jpg

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி ஒன்றில் அமிழ்ந்து கிடக்கும் உள்ளமதைஓரிரு நிமிடங்களில் மீட்டுக் கடத்திவிடும் தொலைவிலிருப்பவரை அருகிலும்அருகிலிருக்கும் போதே தொலைவுக்குமென கடத்திவிடும் ஓரிரு வாய்காஃபி உறிஞ்சல்கள் காஃபியின் கசப்புவிரும்பிகளுக்கு உவப்பு சிலருக்கு உடல் தேவைசிலருக்கு உள்ளத் தேவைபலருக்கு மணித் தேவை காஃபி ஒரு முரண்சிலருக்கு ஆசுவாசம்சிலருக்கு தளர்வுசிலருக்கு உயிர்ப்புசிலருக்கு குவியம் அதிகமருந்துவோர்க்கு அசிடிட்டிஅருந்தவேயருந்தாதவர்க்கு ஆரோக்கியம்குறைவாய் குடிப்போர்க்கு… (READ MORE)

கவிதை

, , , , ,

சிவமென்பது உருவமா? – பரமன் பச்சைமுத்தெ

சிவமென்பது உருவமா?ஓருருவத்திற்குள்ளே அடைபடுவதா இறை?அது உருவங்கடந்த ஒரு நிறை சிவமென்பது இல்லை சிலை,அது ஓர் உன்னத நிலை.சிவமென்பது உருவமல்ல,சிவமென்பது உணர்வு ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்னும் திருவாசகத்து வரிகொள்கிறது சிவமென்பது உருவமில்லா நெறி உருவத்தை வணங்கியபோது வெறும்மனிதனாயிருந்தபாண்டிய முதலமைச்சன்உருவமில்லா பெருந்துறையின் கருவறையில் உறைந்தபோதேமாணிக்கவாசகன் ஆனான் உருவங் கடந்தவனே சிவநிலையை நெருங்குகிறான்உள்ளே சமநிலையை தாங்குகிறான் சிவமென்பது… (READ MORE)

Religion, கவிதை

கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்

 கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)

Manakkudi Manithargal, கவிதை

பெருமாள் கவுண்டர்

🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ஏந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)

கவிதை

wp-1612289262845.jpg

வரட்டும் சிட்டு இங்க…

தைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)

கவிதை

, , ,

சிரிக்கிறார்கள் முன்னோர்களும்

தான் வெற்றி பெற்ற போது ‘உழைப்பு’ என்றும்அடுத்தவர் வெற்றி பெறும் போது ‘முன்னோர்கள் ஆசி!’ என்றும்காரண சாத்திரம் சொல்கிறார் உறவுக்காரரொருவர் சிரிக்கிறேன்,அவரது முன்னோர்களும் சிரிக்கிறார்கள்என்னுடன் சேர்ந்து! பரமன் பச்சைமுத்து30.07.2020 Facebook.com/ParamanPage

கவிதை

குளித்து முடித்து நிற்கிறது மரம்

குளித்து முடித்து சொட்ட சொட்ட நிற்கிறது மரம் குளிப்பாட்டிய மழையன்னைவேறு எங்கோ சென்றுவிட காற்றண்ணனோசூரிய அப்பனோ துவட்டிவிட வரட்டுமெனகாத்திருக்கிறது மரம் – பரமன் பச்சைமுத்துசென்னை19.07.2020

கவிதை

,

wp-1594258658641659303361867114202.jpg

போன நிமிடம் வரை பறவையாயிருந்தது…

போன நிமிடம் வரை பறவையாகபலகனியின் தரையிலிப்போது சிறகாக எந்தப் பறவை அஞ்சல் செய்ததோஎன் வீட்டு முகவரியில் ‘வூகான் இறைஞ்சிச் சந்தையில் புறாவிடமிருந்து பரவியது புதிய வைரஸ்’  ஒரு வைரல் செய்தி வரலாம் நாளைபுறாக்கள் புறக்கணிக்கப்படலாம் அவ்வேளை அதற்குள் சிறகைக் கையிலெடு சிறுவர்களைப் போலச் சிறகை சிலாகிசிவப்பிந்தியனைப் போல சிறகை அணி வாழ்வோம் வா! – பரமன்… (READ MORE)

கவிதை

, , ,

wp-15939352892783999563993329093403.jpg

மிளகாய்ச்செடி கதை

வடக்குப் பக்க பலகனியில்வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி கிடைக்கும் கொஞ்ச  வெய்யிலைதுணி காய இந்நேரம்செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன் வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்திவியர்த்து மகிழ்ந்தேன் வெள்ளை வெளேரென்று விரிந்து வந்தன பதினைந்து பூக்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள் பூக்கும் பிறகு காய்க்கும் என்றுகனியாகும்… (READ MORE)

கவிதை

, , , , , , , ,

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான்

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான் ஒரு நாள் விடியும் கரிநாள் முடியும் என்று காத்திருக்கும் குடிமகன் நான் வறுமைகள் ஒழிக்கப்படும் வெறுமைகள் தீர்க்கப்படும் இன்னல்கள் இந்தியாவைவிட்டேயகலும் என்றே நம்பித் துயிலப் போகிறேன், நம்பியே துயிலெழுகிறேன் கான்க்ரீட் ஜங்கிள் நகரத்தின் நடுவே தட்டான்கள் பறக்கும் சிட்டான்கள் கிறீச்சுக்கும் என்று இச்சை வளர்க்கிறேன் பறம்பு நில… (READ MORE)

கவிதை

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம், ‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை, இருண்ட வானம் அழுகிறது! தழிழகத்தில் மழை. – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

இப்படிக்கு, இக்கால மனிதன்…

நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,

மனைவி படிக்கிறாள்

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)

ஆ...!, கவிதை

,

போகி என்றொரு பெயரில்,

போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பை எதையாவது போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி பெரியவர்கள் மூச்சுத்திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! ‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு, புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை,… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

பவர்…

கடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்! எப்படி இருக்கும் எனக்கு! நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)

ஆ...!, கவிதை

,

ஸெல்ஃப் மேட் மேன்…

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

தீபாவளி புடவை வாங்கும் படலம்

கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும், தூரத்திலிருப்பதைப் பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது புடவைக் கடையில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு! #தீபாவளி புடவை வாங்கும் படலம் #மனைவியோடு கடையில்

ஆ...!, கவிதை

, ,

வாரும் மகாபலி…

வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)

Religion, ஆ...!, கவிதை

, , , ,

Eid Mubrak

Eid Mubarak!!!

    எல்லாம் வல்லவனே,என்னைப் படைத்தவனே…எல்லாவற்றுக்கும் மேலானவனே, எல்லை இல்லாதானே…அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்தஅருட்பெருங்கடலே… வெறும் இந்திரியத் துளியிலிருந்து கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே… ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே! நன்றி! உணவை, பானத்தை, இச்சையை துறந்து இறையெண்ணம் வளர்த்து தூய்மை கொள்ளும் ஈகைப் பெருநாளில் வணங்கித் தொழுகிறேன் இறைவா! நல்வழிப்படுத்து,… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

,

தந்தை மனம்

செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில். இரை  தவிர்த்து  இறை  தேடி ஓடும்  நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க. கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது ” கவிதை எழுதிய கவிதை!” :பரமன் பச்சைமுத்து

கவிதை

, ,