Monthly Archive: April 2016

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

House_Crow_in_Kolkata

காக்கை அணிலோடு மதிய உணவு

எட்டு காக்கைகளோடும், ஓர் அணிலோடும் பகிரும் அனுபவமாய் அமைந்தது என் இன்றைய மதிய உணவு! ஆறு மணிக்காக்கைகள் கீரைச்சோற்றையும், இரு அண்டங்காக்கைகள் தயிர் சோற்றையும், இவைகள் கொத்தி விட்ட மற்ற எல்லாவற்றையும் அணிலும் உண்டன. என் தட்டைக் கழுவி, நீர் நிரப்பி வைத்ததும் ஒன்பது உயிர்களும் பருகின என்பது என் பரவசம்.  (மலர்ச்சி அலுவலகம் மேலே)… (READ MORE)

பொரி கடலை

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

நாலு முழமா எட்டு முழமா – பழசு

நாலு முழமா, எட்டு முழமா என்று அளவு கேட்ட கடைக்காரரை, 28-30ஆ 30-32ஆ என்று சைஸ் கேட்க வைத்துவிட்டன ‘ஒட்டிக்கோ, கட்டிக்கோ’ வெல்குரோ வேட்டிகள்! #ராம்ராஜ் வெல்குரோ

Uncategorized

Theri - Copy

‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம். விஜய்யின் உடையலங்காரம் மிக… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

மனதில் நீர்வார்த்த வானிலை அறிக்கை!

வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம், நீரின்றி தவித்து வறட்சியால் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது, சட்லஜ் – பாக்ரா நங்கல் நீர்ப் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது, ‘ஐபிஎல்’ஐயே தடை செய்யவேண்டும் என்ற பொதுநலவழக்குப் போடுமளவிற்கு மகாராஷ்டிரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்று தினம் வரும் செய்திகளைப் படித்து விட்டு மாநில செய்திகளைப்… (READ MORE)

பொரி கடலை

வேலூர் சரவணபவன்

நேற்று முன்தினம் பெங்களூரூவிற்குப் பயணிக்கும் போது மதிய உணவு சாப்பிட வேலூர் சரவணபவன் வந்தேன். இன்று சென்னை நோக்கிப் பயணிக்கும் வழியில் மதிய உணவிற்காக அதே வேலூர் சரவணபவன். இரண்டுக்குமிடையே நிறைய நடந்துவிட்டன. ஒரு மலையில் ஏறியது, ஒரு அனுபவக் கட்டுரை, உறவினர் ஒருவர் வீட்டில் தடாலடியாக புகுந்து மகிழச்செய்தது, உயிர் நண்பனோடு ஓரிரவு தங்கி… (READ MORE)

Uncategorized

‘மலைகள் அழகானவை’ அல்லது ‘மலேய்டா…!’

மலைகள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. ‘குணா’ பார்த்து விட்டு ‘புண்ணியம் செய் மனமே’ அந்தாதி சொன்ன கமலஹாசன் பாத்திரம் நம்மைப்போலவே இருக்கிறதே என்று வியந்திருக்கிறேன்.  கர்நாடகாவில் இருந்த காலங்களிலெல்லாம் மலைமுகடுகளில் திரிந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சாவன்துர்கா, மேற்குத் தொடற்சியின் கல்கொத்தி மலை மற்றும் போளூர் அடுத்த பர்வதமலை ஏறிய போது கால்கள் விரையும் வேகங்கண்டு ‘மனிதக்… (READ MORE)

Uncategorized

cicketposter - Copy

Life Vs Cricket #India-WestIndies

#India-WestIndies match வரையறை என்பது ஒரு மெல்லிய கோடு;  நாம் கோட்டிற்கு உள்ளே இருந்துகொண்டு நம் வீச்சு கோட்டைத் தாண்டி பயணிக்கும்படி செய்யும்போது பெரும் வெற்றி , நாமே கோட்டைத் தாண்டிப் போகும்போது நமது முயற்சிகள் முழுதும் வீண் என்பது கிரிகெட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும். – பரமன் பச்சைமுத்து 01.04.2016 சென்னை    

Self Help

, , ,