Monthly Archive: August 2019

இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய… (READ MORE)

Uncategorized

சென்னை மழைநீர் சேமிப்பு

சாலையோரங்களில் உறை கிணறு, பயன்படுத்தாமல் விடப்பட்ட நூற்றுக் கணக்கான பாழுங்கிணறுகளை கண்டறிந்து சீர் செய்து மழை நீர் சேமிப்பு என செயலில் இறங்கியுருக்கும் சென்னை நகராட்சியை எழுந்து நின்று பாராட்டுகிறோம். இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி எங்கும் பரவட்டும், வாங்கும் வான் மழையை தாங்கும் நிலத்தினுள் அனுப்புவோம். நிலத்தடி நீர் உயரட்டும் உயிர்கள் செழிக்கட்டும்! வாழ்க!… (READ MORE)

Uncategorized

வழுக்கி விழும் வஸ்தாதுகள்

பெங்களூரு வேலூர் நெடுஞ்சாலையில் பயணித்து வந்து தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை ஆம்பூரின் அருகில் உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு சாப்பிடப் போனாராம் ஓட்டுநர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால் கண்டெயினர் லாரியைக் காணோமாம். பதறிய ஓட்டுநர் தனது உரிமையாளரை உடனே அழைத்து தகவல் தர, சிதறாத உரிமையாளர் ஜிபிஎஸ்ஸை வைத்து லாரி எங்கே… (READ MORE)

Uncategorized

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

சிவராஜ் தெரியுமா?

கடலூர் ஓ.டி எனப்படும் பழைய நகரத்திலுள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு மலர்ச்சி உரையாற்றுவதற்காகப் போகிறேன். பள்ளியின் நிறுவனர், தாளாளர், உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களோடு அமர்ந்திருக்கிறேன். சிறப்பு விருந்தினர் என்று கூறி சிறப்பு செய்கிறார்கள். பக்கத்திலிருக்கும் பள்ளியின் முக்கிய நிர்வாகியிடம் சபை நாகரீகத்திற்காகப் பேசுகிறேன். பதிலுக்கு அவர் என்னிடம் வினவுகிறார். ‘உங்க வீடியோவெல்லாம் பாத்தோம். ரொம்ப மோட்டிவேட்டிங்கா இருந்தது…. (READ MORE)

Uncategorized

ஒரு பெருநாளில் தொடங்கப்பெற்றது…

‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’ இவை, விடுமுறை என்பதைக் குதூகலாகமாக கொண்டாடும் ஒரு மகள் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய வாக்கியங்களாகத் தெரியலாம் உங்களுக்கு. இவை, எனக்கு என் வாழ்வின் புதிய உலகத்திற்கான பெருங்கதவைத் திறந்துவிட்ட திறவுகோல். பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் இரண்டாம் தளத்திலிருந்த வீட்டின் கூடத்தில் பாய் விரித்து யோகப்… (READ MORE)

Uncategorized

Nerkonda-Paarvai-Tamil-Ringtones-For-Cell-Phone

‘நேர் கொண்ட பார்வை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இலக்குகளை நோக்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் மாநகரின் மாதுக்கள் மூன்று பேரின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தால், வாழ்வின் போக்கே மாறிவிட, திக்கற்றுத் திணறி நிற்கும் அவர்களுக்கு உதவிட பழைய பஞ்சாங்கமாகிப் போன ஒருவர் வந்தால், அதிகார பலமும் பண பலமும் கொண்ட பெரும் புள்ளிகளிடமிருந்து புள்ளிமான்களை சட்டத்திற்குட்பட்டு காப்பாற்ற முடியுமா, என்னவாகிறார்கள் அவர்கள்? என்பனவற்றை கதையாக்கி… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி… (READ MORE)

Uncategorized

, , ,