Monthly Archive: February 2020

பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும்.

உள்ளுணர்வு அலாரம் எழுப்ப துயிலெழுபவனுக்கு செல்லிடப்பேசியில் அடிக்கும் வெளி அலாரம் இரண்டாம் கட்ட ஏற்பாடே.  செல்லிடப்பேசி அலறியபோதும் கண் திறக்க இயலவில்லை இன்று. உடம்பு கொதிக்கிறது. ‘இன்னும் சில நிமிடங்கள் கொடேன்!’ என்று கண்களும் உடலும் கெஞ்சுகின்றன.  ‘ஐயப்பா ஸ்கூல்ல ப்ரோக்ராம் இருக்கு, கோட் அயர்ன் பண்ணனும். உடற்பயிற்சி, ஓஎம்ஆர் ட்ராஃபிக்…’ என அறிவு முணுமுணுத்தது…. (READ MORE)

Uncategorized

வியக்கிறேன்

‘அப்பா… அங்க பாரு, ஃப்ளைட் நிக்குது!’ விமான நிலைய வாயிலிலிருந்து ஓடுதளத்திற்கு பேருந்தில் வரும் போது, கண்ணாடியின் வழியே தூரத்தில் நிற்கும் விமானமொன்றைப் பார்த்து பரவசப்பட்டு கூச்சலிடுகிறான் சிறுவன். மொத்த பேருந்தும் புன்னகைக்கிறது. ‘அப்பா… அங்க பாரு கபாலி ஃப்ளைட்!’ ஸ்பைஸ்ஜெட் விமானமொன்றைப் பார்த்துக் கூவுகிறான். ‘அப்பா, நம்ம போற ட்ரூஜெட் எப்பப்பா வரும்?’ பேருந்து… (READ MORE)

Uncategorized

கங்கை கொண்ட சோழபுரம்

வணக்கம் பாலா. உண்மையாகவும் இருக்கலாம், பின்னே வந்தவர் தன் பார்வையில் பட்டதை ‘இதுதான் நிஜம்!’ என்று பரப்பியுமிருக்கலாம். பெருவுடையார் கோவில் ராஜராஜனின் ஆட்சியின் 25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரனுக்கு அப்போது இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. சோழப்படை தலைவனாகவே ராஜேந்திரன் இருந்தான். இருவரும் ஒன்றாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி. 1014ல்… (READ MORE)

Uncategorized

wp-15815138552624968990881890515864.jpg

ஏவிசிசி பாலிடெக்னிக் – 91 பேட்ச் – அப்டேட்:

மலர்ச்சி மாணவரும் புதுச்சேரியின் பிரபல தொழில்முனைவோருமான முத்துக்குமரனின் ‘சிவா பிரிண்ட்ஸ்’ புதிய அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதே, நப்பின்னையிடமிருந்து அழைப்பு, அவரும் ஜெகதீஸ்வரியும் விழாவிற்கு வருவதாக. ‘யாரோ ஒருவரின் அலுவலகத்திறப்பு விழா!’ ‘நான் அழைக்கப்படவில்லை, எதற்குப் போக வேண்டும்?’ என்ற திசையில் சிந்திக்காமல், ‘என் க்ளாஸ்மேட்டப் பாக்கப் போறேன்!’ என்ற ஒரே முடிவில்… (READ MORE)

AVCCP

ஆ….!

‘வயின்ஷாங் ஹா!’ ‘தம்பீ, என்னாட சொல்றே!’ ‘அம்மா… இந்த ஊர் பாஷையில மாலை வணக்கம்ன்னு அர்த்தம்மா. ஃபோன எடுத்தாலே ‘வயின்ஷாங் ஹா, வைன்ஷாங் ஹா’ன்னு சொல்லி சொல்லி பழகி, உன்கிட்டயும் அப்படியே பேச்சுல வந்துருச்சிம்மா!’ ‘பொண்ணு பாத்திட்டுருக்கோம் தம்பீ. கும்பகோணம் போற வழியில நாச்சியார் கோயிலுக்கு முன்னால உள்ள போனா இருக்காம் ஒரு ஊரு. அங்கேருந்து… (READ MORE)

ஆ...!

, ,

பெரு நகர காவல் துறைக்கு மலர்ச்சி வணக்கம்!

நகரின் உள்ளே நுழையும் வாகனங்களின் பதிவு எண்ணைப் படமெடுக்குமளவிற்கும்,விதி மீறல் வாகனங்களைக் கண்டறியும் வகையிலும் துல்லியமாகப் படமெடுக்கும் நவீன கேமராக்களை நந்தனம் சிக்னல் போன்ற இடங்களில் நிறுவி கலக்குகிறது பெருநகர காவல் துறை. விதிகளை மீறும் வாகனங்களை தானாகவே படமெடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதிகள் கொண்டவையாம் இந்த கேமராக்கள்.  சபாஷ்! இது போன்ற மிகத்… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15811451877651185453074450219831.jpg

இளநீர்… இளநீர்!

இலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர்,  தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர்,  பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு… (READ MORE)

பொரி கடலை

, , ,

கஃபே உடுப்பி ருச்சி

ஓர் உணவகத்தின் உள்ளே நிகழும் சிறு சிறு வெளிப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது, நம்மை கண்டு கொள்ள. இடப்பறம்: ‘மாவு இப்பத்தான் அரைக்கறாங்களா?’ சீருடையணிந்த பணியாளர் வருவதைக் கண்டு அவரிடம், ‘பூரி சுட்டுக் குடுக்கனும். நேரம் ஆவும் சரி. இட்லிக்கு என்னா? ஒரு இட்லி ஏன் இவ்ளோ நேரம்! இத்தனைப் பேர் வேலை பாக்கறீங்க, ஒரு இட்லிக்கு… (READ MORE)

Uncategorized

மு. பச்சைமுத்து அறக்கட்டளை – முதல் அன்னதானம்

அமரர் கீழமணக்குடி மு. பச்சைமுத்து  அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான 05.02.2020 அன்று,  சென்னை வடபழனியில் சிவன் கோவில் தெருவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! முதல் அன்னதானம் 05.02.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

காலத்திற்கேற்ப…

பெரியாரின் கொள்கையிலிருந்து பிரிந்து அரசியல் இயக்கமாக உருவான அன்றிலிருந்து திமுகவின் வரலாற்றிலேயே இது நடந்ததில்லை என்கிறார்கள். இறைமறுப்பு, பகுத்தறிவு என்பதே கொள்கையாகக் கொண்டதால் இதுவரை நடந்த 9 மாநாடுகளிலும் கொடியேற்றித் தொடங்குவதே தொடக்கமாக இருந்தது. இப்போது திருச்சியில் நடந்த 10வது மாநாடு இதுவரை எப்போதும் இல்லாத முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு மங்கள இசை ஒலிக்கப்பட்டு… (READ MORE)

Uncategorized