Monthly Archive: October 2021

புவனகிரி பள்ளி – என்சிசி வாத்தியார்

*5* *புவனகிரி – பள்ளி* ( சென்ற பதிவில் புவனகிரி பள்ளியின் டிஜே எனப்படும் ஜெயராமன் ஐயா பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு மகிழ்ந்து அமெரிக்காவிலிருந்து அவரது மகன் ஒளி, குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பதிவை ஜெயராமன் ஐயாவிற்கு வாசித்துக் காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் மகிழ்ச்சி! வாழ்க! ) ‘புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது  தெரியுமா?’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தமிழ்நாடு தினம்

மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து போன கர்நாடகமும் ஆந்திரமும் நவம்பர் 1ஐ ‘கர்நாடகா டே’ ‘ஆந்திரா டே’ எனக் கொண்டாடுகிறார்கள். ‘நம்மிடமிருந்து பிரிந்து போனது இழப்பு, எப்படி அந்த நாளை நாம் கொண்டாட முடியும்?’ என்று பலகாலமாக பேசப்பட்டு வந்து கருத்துகள் மாறியுள்ளன இன்று. பழ நெடுமாறன் போன்றோர் நவம்பர் 1ஐ  ‘தமிழ்நாடு தினம்’ எனக் கொண்டாட… (READ MORE)

Politics

தாத்தாவாம்

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது. அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.  எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன். அக்காவின் பேரன் என்பதால்… (READ MORE)

பொரி கடலை

ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’ ‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’… ‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’ ‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’ … ‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’… (READ MORE)

பொரி கடலை

, ,

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

ஜெயராமன் ஐயா : புவனகிரி பள்ளி

*4* *புவனகிரி – பள்ளி* ( புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது தெரியுமா?. சரி பாதியில் விட்ட ஜெயராமன் ஐயா பற்றியதை முடித்து விட்டு வருவோம் முதலில்) ஆற்றல் உள்ளிருந்தும் எதனாலோ குவியம் பெறாமல் ஏனோதானோ என்று பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் மாணவனை, எங்கிருந்தோ வந்து சில ஆசிரியர்கள் ‘படக்’கென்று பொருத்தி திருத்தி உள்ளே… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்! …. ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள… (READ MORE)

Politics

,

அட இவர் பேசுகிறார்!

பேசும் விதத்தால் தன் பேச்சு வன்மையால் எதிரில் கேள்வி கேட்பவரை விவாதத்தில் எதிரில் இருப்பவரை சாமர்த்தியமாக நிறுத்தி ‘லெவல்’ காட்டுவது பெரியாரிய திராவிட தலைவர்களிடம் பொதுவாகவே இருக்கும் பல காலமாகவே நாம் கண்டு வரும் இயல்பு. ஆ ராசா, சுபவீரபாண்டியன் என பலரை குறிப்பிடலாம். அதிலும் என்ன கருத்துக்களை பேசினாலும் சுபவீ ‘சம்பூகன்’ சங்கதியைக் கொண்டு… (READ MORE)

Politics

இரு திரையரங்குகள் : புவனகிரி – 3

*3* *புவனகிரி – பள்ளி* போன பதிவைப் படித்து விட்டு புவனகிரி ‘ஆபிதா வீடியோ விஷன்’ பற்றி  ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் உட்பட சிலர் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.  ‘இப்படி ஒன்று இருந்ததா?’ என்று கேட்டும் எழுதியுள்ளனர். இதற்கு பதிலாக சிறு குறிப்பு வரைய வேண்டுமானால் ஆபிதா வீடியோ விஷன் இருந்த காலத்தை முதலில் சொல்லியாக வேண்டும்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புத்தர் சிரிக்கிறார்…

புத்தர் சிரிக்கிறார்,சிலுவையிலறையப்பட்ட ஏசு கிறிஸ்துவுக்கும்பௌத்தம் தந்த புத்த பகவானுக்கும்பூமாலை சூட்டி ஆயுதபூசை பொட்டிட்டதொழிலாளியின் வெள்ளந்தி மனம் கண்டு! – பரமன் பச்சைமுத்து15.10.2021 #AyuthaPoojai#Paraman

கவிதை

போற போக்கைப் பார்த்தால், பிரியங்கா வதேராவை காங்கிரஸ் தலைவராக்கிடுவாங்களோ! நடக்கறதெல்லாம் பாத்தா அப்படித்தான் தெரியுது! – மணக்குடி மண்டு 14.10.2021

Politics

புவனகிரி பள்ளி – 2

*2* *புவனகிரி பள்ளி* ( சாயப்பு வாத்தியார் பற்றிய முந்தைய பதிவு பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக அறிகிறோம். ‘பரமன், சாயப்பு வாத்தியார்ன்னா அந்த +2 கெமிஸ்ட்ரி வாத்தியாரா?’ என்று கேள்வி அனுப்பியிருக்கிறான் பங்காருபேட்டையிலிருந்து முன்னாள் புவனகிரி மாணவன், இந்நாள் ரயில்வே ஊழியன். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புக்கு வேதியல் எடுத்தது, ’16 வயதினிலே’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு… (READ MORE)

Politics

, ,

wp-1633974077591.jpg

டாக்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தனது திருமணத்தை உறுதி செய்ய பெண் வீட்டுக்கு வந்த ராணுவ மருத்துவரை ‘உன்னோட செட் ஆகாது போப்பா!’ என்று சொல்லி அதிர்ச்சி தரும் அந்தக் குடும்பத்தினரே கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியடைந்து நிற்க, இவர்  உதவ இறங்கி ‘ஹ்யூமன் ட்ராஃப்பிக்கிங்’ எனும் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலின் நூல் பிடிக்கிறார். உலக அளவில் பலம் மிக்க அந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , ,

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’: புவனகிரி பள்ளியில் தினமும் ‘ஷூ’ அணிந்தவர், அந்தக் காலத்திலேயே அப்படியொரு ‘ஷூ’ அணிந்தவர் என்றால் அது அவர்தான். இந்த ஊருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்பது போன்ற தோற்றம் கொண்டவர் சாயப்பு வாத்தியார். நல்ல உயரம், அது தெரியாத அளவிற்கு பருமனான உடல், நீளமான முகம். பாகிஸ்தான் முஸ்லீம்கள்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புரட்டாசி சனி

பிஜேபியா திமுகவா என்பதற்குள் நுழையவில்லை, விரும்பவுமில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வருவதற்குக் கூட ஏற்பாடுகள் அறிவித்துள்ளது அரசு, சிறப்பான முன்னேற்பாடுகளோடு. திரையரங்குகள், வணிக வளாகங்கள் என எல்லாமும் செயல்பாட்டில். பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிப்பது அவர்களுக்கு காலம்காலமான ஒரு விருப்பம், வேண்டுதல்…. (READ MORE)

Politics

நெடுஞ்சாலை வழி நிறுத்த உணவகத்தில் நமது நூல்கள்

நெடுஞ்சாலைப் பயணத்தில் தேநீருக்காக இறங்கிய உணவகத்தில் மருமகனின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பரவசப்படும் அத்தை! அதுவும் ‘அப்பாவின் 75வது பிறந்த நாளுக்கு அர்ப்பணம்!’ என்று வந்த ‘வாழ்க்கை பாசறையில்…’ நூலைப் பார்த்ததும் பல உணர்வுகள் அவருக்கு! பரமன் பச்சைமுத்துஅச்சரப்பாக்கம்06.10.2021

Paraman's Book

, , , ,

wp-1633404586787.jpg

உள்ளே கனல் – Malarchi Online Course

பலரின் உள்ளத்தில் கனல் மூட்டி உந்தித் தள்ளி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி நேற்று நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’ MALARCHI Online Course. பல நாடுகளிலிருந்து பல ஊர்களிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், ஆழமான மாற்றங்கள், நிறைவான உணர்வுகள் என நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’. இறையை நோக்கி ததும்பும் நன்றியுணர்வோடு நான்! – பரமன் பச்சைமுத்து05.10.2021… (READ MORE)

Paraman's Program

, , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘சிவ்வழிபாட்டு மாலை’நோக்கம் ஒன்று நிறைவேறுகிறது

மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’. மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான். எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்! இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

wp-1633322887231.jpg

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் 007 படம் என்பதே சுவையான உணர்வுதான், அதுவும் முப்பரிமாணத்தில் கண்களுக்கருகில் படம் விரிய நல்ல பின்னணி இசை தெறிக்க. டேனியல் கிரெய்க் வந்ததிலிருந்தே பியர்ஸ் ப்ராஸ்னன் காலம் வரையிலிருந்த ஜேம்ஸ் பாண்டிற்கென்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பணம் இல்லாத போது

மாநிலங்களிடம் குறிப்பாய் தென்னிந்திய மாநிலங்களிடம் நிதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகளுக்கு மாநில அரசே இழப்பீடு தரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது சரியில்லை. மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் இந்தப் பொறுப்பை. – மணக்குடி மண்டு01.10.2021

Politics