Monthly Archive: December 2023

IMG-20231229-WA0172

‘தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்!’

‘எத்தனை எழுதினாலும் எழுத இன்னமும் இருக்கிறது!’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு எவ்வளவு எழுதினாலும், எத்தனை நூல்கள் எழுதியிருந்தாலும்கூட தன் எழுத்தை அச்சில் பார்க்கும் போது பேருவுகையும் பெருமகிழ்ச்சியும் பொங்குமாம். ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே அப்படியென்றால், ‘நான் ஓர் எழுத்தாளன்தானா?!’ என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, என் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்… (READ MORE)

Paraman's Book

, , , , , , , ,

எம்ஜியார்…

சினிமா கொட்டகைகளோ தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத அன்றைய மணக்குடியில் படம் பார்க்க வேண்டுமென்றால் 7கிமீயில் இருக்கும் புவனகிரிக்கோ, 12 கிமீயில் இருக்கும் சிதம்பரத்திற்கோதான் போக வேண்டும். பேருந்து வசதியே இல்லாத அக்காலங்களில் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு அதில் வைக்கோலை பரப்பி அமர்ந்து கொண்டு எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப் போனாலும் அது ‘திரிசூலம்’ ‘கௌரவம்’ வகை சிவாஜி… (READ MORE)

பொரி கடலை

,

கஹாங் ஸே பையா…

பழக்கமில்லா தெரியாத உணவகங்களில், எது வயிற்றைக் கெடுக்காதோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதும், தெரிந்த பழகிய உணவகத்தில் புதியதை முயற்சி செய்வதும் என் வெளியூர்ப் பயணங்களில் கடைபிடிக்கப்படும் செய்முறை. ‘சரி! காலை டிஃபனுக்கு இந்த ஒரு வேளைக்கு அரிசி இல்லாத உணவு கிடைக்குதா பாப்போம்!’ என்று இறங்குவது ஓர் உதாரணம். பலமுறை உணவுண்ட சிங்க பெருமாள்… (READ MORE)

பொரி கடலை

திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , ,

அடுத்து செய்ய வேண்டியது

முன் குறிப்பு : உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம். குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும்… (READ MORE)

Uncategorized

,

அசத்திய சந்தோஷம் டாக்டர்

அண்ணா நகர் ஸ்டார்பக்ஸ் வாசலில் காரில் ஏறப் போனவன், கீழே சாக்கடை பொங்கி வழிவதால் வண்டியை நகர்த்தச் சொல்லி சாலையில் இறங்கி நின்றேன். ‘ஹலோ சார்!’ குரல் கேட்டு திரும்பினால் இன்ப அதிர்ச்சி. அப்பல்லோ, ட்ரிப்பிள் எம் என உயர் ரக பெருமருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், எழும்பூர் சந்தோஷ் செஸ்ட் ஹாஸ்பிட்டலின் தலைமை… (READ MORE)

பொரி கடலை