Addressed LUGI Annual Convention, Chennai
Enjoyed the tear, laughter, profound, deep moments of those 40 people in LUGI Annual Convention, Chennai @Hotel HILTON. People bought my book ‘Manappalagai’
Enjoyed the tear, laughter, profound, deep moments of those 40 people in LUGI Annual Convention, Chennai @Hotel HILTON. People bought my book ‘Manappalagai’
சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு, வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)
சென்ற வருடம் முகநூலில் ஒரு விவாதத்திற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். ‘அன்பென்பது என்ன, நீ அழுது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை நான் பக்கத்திலிருக்க இடம் வேண்டும் என்பதா? அல்லது நான் தூரமாகப் போனாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கான இயக்குநர் பாலாவின் பதில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம். ராஜாவும்,… (READ MORE)
சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன். ‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார். ‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்! பரமன் பச்சைமுத்து மணக்குடி 16.01.2015
சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர். வைரமுத்து தனது நூலொன்றில், ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்! நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)
அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)
தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது. தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)
இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள் ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள். பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள். ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். பெய்யெனப் பெய்த பேய்… (READ MORE)
‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள். உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில். மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க. மலர்ச்சி வணக்கம்! -பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage
தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை. தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர். தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான். அவருக்கு வேட்டி ‘தினம்’. எனக்கு ‘வேட்டி தினம்’! அப்பாவைப் போல, பாட்டனைப்… (READ MORE)
ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில். ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப்… (READ MORE)
காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள். காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது… (READ MORE)