Monthly Archive: January 2018

இசை ராஜா

‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ ‘மெட்டி ஒலிக் காற்றோடு…’ ‘தென்றல் வந்து தீண்டும் போது…’ ‘காற்றில் எந்தன்…’ ‘என்னுள்ளே… என்னுள்ளே…’ ‘ஓம்… சிவோஹம்…’ ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்…’ எந்த உணர்வில் நாமிருந்தாலும், நம்மை முற்றிலும் மாற்றி மனநிலையை நேராக்கிவிடும் பாடல்கள். #Ilayaraja #IsaiRaja Facebook.com/ParamanPage

Uncategorized

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

வீரபாண்டியன் மனைவி

கி.பி. 1180ல் மதுரையில் பறந்த பாண்டியர்களின் மீனக் கொடியையும் அவர்களது நேசப் படையான சிங்களவர்களின் ஈழக்கொடியையும் முறித்து மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புலிக்கொடியை பறக்க விட்ட காலத்தில் நடந்தவற்றை களமாக கொண்ட சரித்திர புனைவு. எஸ்ராவால் சிறந்த நூல் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கும் இந்த நாவல் நடிகர் திலகம் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை வசனமெழுதிய… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக்கொண்டிரு… – நூல்

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Uncategorized

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு.

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு. ஆனால், எழுத உட்காரும் போது மெள்ள மெள்ள எழுத்து என்னை ஆட்கொள்வதும் அந்த வேறோர் உணர்வில் மூழ்கிப் போவதும் பிடிக்குமெனக்கு. அதில் காலக்கணக்கு இல்லை. கடிகாரங்கள் இல்லை. உள்ளே போய் திரும்ப வெளியே வருவதில் நிமிடங்கள் கடந்து போயிருக்கும், மணி கரைந்து போயிருக்கும். இன்று தினமலரின்… (READ MORE)

பொரி கடலை

நதி போல ஓடிக்கொண்டிரு – நூல் – பரமன் பச்சைமுத்து

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

பல்லாயிரம் பெலிக்கன்கள்

படகில் பயணிக்கும் போது பக்கத்து தொட்டு விடும் தூரத்து திட்டில் பல்லாயிரம் பெலிக்கன்கள் முதுகைக் காட்டிக் கொண்டு கோடைகாலத்தில் வரும் டிஸ்னி படங்களில் வருவதைப் போல ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு! மலர்ச்சி மாணவர் கார்த்திகேயனோடு ‘டச்சுக்காரர்களின் கல்லரைகளை பார்த்து வருவோம் வா!’ என்று ஒருமுறை பழவேற்காடு ஏரிப்பக்கம் போன போது… (READ MORE)

Uncategorized

இறையே நன்றி

‘என்னோட வீக்னஸ் என்னன்னு தெரிஞ்சுது இப்பதான். இனிமே சரி பண்ணி ஜெயிச்சிடுவேன்’ என்று கை தூக்கிப் பகிர்ந்தாள் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பதின்ம வயது மாணவி ஒருத்தி. அதிகாலை புறப்பாடு, நான்கரை மணிநேரம் போக நான்கரை மணி நேரம் வர என்று ஒன்பது மணி நேர சாலைப் பயணம், மணி நேரம்… (READ MORE)

Uncategorized

vetrivagaiAdvt - Copy

வெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’

முன்னுரை: இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது. வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , ,

செம்புலம் கண்காட்சி

கொங்கு மண்டலத்து காங்கேயம் காளைகள், கரூர் சேலத்து போர் மாடுகள், அந்தியூர் பகுதியின் பர்கூர் மலை மாடுகள், நாகை தஞ்சையின் உம்பளச்சேரி மோழை மாடுகள், தேனியின் தேனி மலை மாடு, தென் மதுரையின் பட்டி மாடு என வரிசையாய் கம்பீரமாக காளைகளும் பசுக்களும், கொங்குவின் கோயம்புத்தூர் ஆடு, மைலம்பாடி ஆடு, செங்கம் ஆடு, சேலத்தின் மேச்சேரி… (READ MORE)

Uncategorized

ராஜராஜனை சிலாகித்து நிற்கிறேன்

🌹🌹 🙏 எப்பேர்ப்பட்ட மனிதனவன்! சிவபாதசேகரன் என்று பெயர் கொண்டு, சிவனைத் துதித்தவன், நாலு பனை உயரத்திற்கு சிவனுக்கு கற்றளி எழுப்பியவன்… தன் மகள் சந்திரமல்லி புத்தத்துறவியாகி மாதேவடிகளாக மாறிய போது இணங்கி துதித்திருக்கிறான்! ராஜராஜனைப் பற்றி சிலாகித்து நிற்கிறேன்! 🌹🌹

Uncategorized

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,