Monthly Archive: June 2022

ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 28வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஆனி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.06.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வந்தது சாகித்ய விருது!

குமுதம் இதழால் எனக்கு அறிமுகப்படுத்தவர் மாலன்.  யதேச்சையாக படிக்கத் தொடங்கி அவரின் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது எனக்கு ஒரு காலத்தில். தொலைக்காட்சி ஷோ நடத்திய மாலனை விட பத்திரிக்கையாளர் மாலன் சிறந்தவர் என்பேன். மறைந்த பத்திரிக்கையாளர் சுப்ரமணிய ராஜூ, சமகால நிகழ்வுகள் என எதைப் பற்றியும் மாலனால் வேறு பரிணாமத்தில் எழுதமுடியும்.  ‘ஜன்னலுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

காக்கைகளுக்கும் சுயமரியாதை உண்டு போல

காலை பால்கனி கதவை திறந்து செடிகளை கவனித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்களை துண்டாக்கி விளிம்பு சிமெண்ட் கட்டையில் வைத்து விட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை வாசிப்பது என்ற என் வழக்கத்தில் பிஸ்கட் துண்டுகள் வைப்பதை மறந்து விட்டேன் இன்று. கைக்கெட்டும் தூரத்து எலுமிச்சை மரத்தில் வந்தமர்ந்த காக்கை, பிஸ்கெட் இல்லாத சிமெண்ட் கட்டையைப் பார்த்து விட்டு ‘கா…’ என்றது…. (READ MORE)

பொரி கடலை

மனித மலம் அள்ள ரோபோ – ஹோமோசெப் – சென்னை ஐஐடி

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்தார் எங்கள் தலைவர்!’ என்று ஆளாளுக்கு சரடு விட்டுக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் மனித கழிவுகளை அகற்ற உண்மையாகவே ‘ஹோமோசெப்’ என்றொரு ரோபோவை வடிவமைத்து தயாரித்து செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள். பெங்களூருவும், புனேவும், டெல்லியும் இதைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனவாம். தமிழகம் அதிக அளவில் பநன்படுத்திக் கொள்ளட்டும்… (READ MORE)

பொரி கடலை

கடற்புரத்து மீட்பர்கள், நல்ல திட்டம்!

சில நல்ல மனிதர்கள், நல்ல அமைப்புகள் முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் அரசின் கவனத்திற்குப் போவது நன்று. எந்த வித ‘ஈகோ’வும் இல்லாமல் அதை ஏற்று அவர்களோடே கை கோர்த்து அதை இன்னும் விரிவாக பரவலாக செய்வது அரசு செய்யும் அடுத்த உயர் நிலை நற்செயல். சில ஆண்டுகளாக கடற்புரத்து மீனவ இளைஞர்களை தேடிப்பிடித்து கருவிகள்… (READ MORE)

Politics

wp-16545851418324918622564134180898.jpg

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு…

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு. மாணவர்களும் ஆசிரியனும் சேர்ந்து ஒருமித்து ஒருமுகப்பட்டு தங்களை தரும் தருணங்கள் அவை. ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ செய்யும் ‘ஸிக்பி ப்ரோட்டோகால்’லையெல்லாம் கடந்தவொரு கடத்தும் பரிமாற்றம் அது. தேடல் உள்ள உள்ளத்திற்குள் மேலும் தூண்டல் உருவாக்கி தீண்டல் இல்லாமல் உள்ளே ஊற்றப்படும் ஒட்பம் அது. அதுவும் தன் மடியில் வந்தமரும்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

, , , , , , ,

தீண்டித் தின்பது

அடியே…. காதல் என்பது தீண்டித் தின்பது முதலில் காதலர் தின்பர் – பிறகு காதல் அவர்களைத் தின்னும் தின்பது இன்பம்தின்னப்படுவது இன்னும் பேரின்பம் தின்னத் தின்ன தெவிட்டிடும் உலகில்தின்னத் தின்ன தெவிட்டாதது காதல் மட்டுமே, காமம் கலந்த காதல் மட்டுமே காதல் என்பது வெறும் வாயால் அல்ல, ஐம்புலன்களால் தின்னுவது தீண்டலில் தொடங்கி தின்பதில் செழிக்கிறது… (READ MORE)

சிவநெறித்தேவன்

images-1.jpeg

‘விக்ரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அடுத்தடுத்து கொலையுண்டு போகும் காவல்துறை அதிகாரிகள் வரிசையில் பொருட்பெண்டிர் நாடும் குடித்து குணம் கெட்டுத் திரியும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியும் கொலையுண்டு போக, துப்பு துலக்க வரும் கூர்மதியாளன் கவனமாய் நூல் பிடித்து நகர்ந்து நகர்ந்து முக்கிய கண்ணியைப் பிடிக்கையில் ‘ஓகோ!’ என்று வியந்து நிமிர்ந்து நிற்க, அதன் பிறகு நடக்கிறது முழு களையெடுப்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,