Monthly Archive: April 2023

wp-1682706185115.jpg

பொன்னியின் செல்வன் 2′ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சுந்தர சோழரே பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார் என்று பேச்சுகள் நிகழும் வேளையில் சுந்தர சோழரால் ஈழத்திலிருக்கும் இளவல் அருண்மொழியை சிறை செய்து வர கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அப்படி வந்த கலம் புயலில் அடிபட்டு உடைந்து  அருண்மொழி கடலில் மூழ்கினார் என்பதோடு முடிந்த ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ன் தொடர்ச்சியாக விரிகிறது இப்போது வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

புலோத்துங்கன் கால செப்பேடுகள் சீர்காழியில் கிடைத்தவை

கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி? பரமன்: பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள். “சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 38வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை24.04.2023( நாகர்கோவிலிலிருந்து)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

தெற்கில் வாழும் குமரியடி பாப்பா

நான்காம் வகுப்புப் படிக்கும் போது, நண்பர்களுக்கு பொருள்களை பரிசாகத் தரலாமென்ற பிரஞ்ஞை கூட எனக்கு இல்லாத அவ்வயதில், பலராம ஐயர் வீட்டு நட்ராஜ் ‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று கண்ணாடியும் மரச்சட்டமும் போடப்பட்ட, ஒரு கையளவு உயர அகலம் கொண்ட அம்மன் படமொன்றைத் தந்தான். மணக்குடியிலிருந்து சபரிமலைக்குப் போகிறவர்களின் குருசாமியாக… (READ MORE)

Paraman Touring

, , , , , , ,

wp-1681652196139.jpg

‘காக்கை செய்யும் சேட்டை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தெலுங்கானாவில் நகரமும் இல்லாத கிராமும் இல்லாத கலவையான, காலகாலமான நம்பிக்கைகளில் ஊறிப் போய் இருக்கும் ஊரொன்றில் வாழும், வாய் துடுக்கும் குதூகலமும் நிறைந்த முதியவரான நிலக்கிழார் கொமரய்யா திடீரென இறந்து போய் விட, அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள் எரியூட்டுதல் எல்லாம் முடித்த குடும்பத்தினர் அதன் தொடர்ச்சியான சடங்காக ‘பிண்டம் வைக்கும்’ உணவை காக்கை உண்ண மறுக்கிறது…. (READ MORE)

Manakkudi Talkies

, ,

எதிர்பார்க்கிறேன்

நேற்று ஐபிஎல் டிக்கெட் பற்றி அதிமுக அமைச்சர் கேட்டதற்கு தந்த பதிலால் மட்டுமல்ல, ‘மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்’ என்ற அறிவிப்பால் மட்டுமல்ல, பதவி ஏற்றதும் ஒரிசா – பீகார் – வங்காளம் – டெல்லி என்று போய் முன்மாதிரிகளை பார்வையிட்ட போதே, மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த போதே தெரிந்து விட்டது உதயநிதி தன்… (READ MORE)

Politics

,

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?  சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , ,