Monthly Archive: October 2019

போட்றா டிக்கெட்ட…

இவ்வளவு ஆண்டுகள் எல்லாம் பார்த்த பிறகும் செய்த பிறகும், சாலையோரத்தில் பஸ் நிறுத்தத்தின் அருகில் பதற்றத்தோடு நிற்கும் ஆட்களோடு வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து இண்டர்வ்யூக்குப் போனால் எப்படியிருக்கும்? ….. அமெரிக்க விசாவிற்காக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில் கிட்டத்தட்ட சஃபையர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தையும் தாண்டிய நீண்ட வரிசையில் வெய்யில் பனி மழை பாராமல்… (READ MORE)

Uncategorized

images-58562385580449821885..jpg

‘பிகில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தந்தையின் கனவை தன் வழியே நிறைவேற்ற முடியாமல் சூழலால் தவற விட்ட தனயன் அதே கனவை போராடி தனது மக்களின் வழியே நிறைவேற்றினால், போடுறா ‘பிகில்’! தோல்வி நிலையில் அடி மட்டத்தில் கிடக்கும் ஒரு விளையாட்டு அணியை வழி நடத்த ஒருவர் வருகிறார், நல்லது செய்ய வரும் அவருக்கு கீழே அணியிலும் எதிர்ப்பு மேலே கமிட்டியிலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

67393670338997342621667302.jpg

‘வீடுகளெல்லாம் வீடுகளல்ல…’ அல்லது ‘வீடெனப்படுவது யாதெனின்…’ – ‘கும்பளாங்கி நைட்ஸ்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘அயலூர் சினிமா’: திறந்த வானத்தின் அடியில் பரந்த ஏரி அதன் மூலையில் தரை வழிப்பாதையே இல்லாத சுற்றிலும் நீர்சூழ் வீடு. அந்த வீட்டிலிருந்து வெளியே பால் வாங்கப் போக வேண்டுமென்றாலும் பள்ளிக்குப் போக வேண்டுமென்றாலும் அல்லது அந்த வீட்டிற்கு எவர் போவதென்றாலும் படகில் பயணித்தே போக வேண்டும். பால் பொழியும் நிலவும், பகல் மஞ்சள் வெய்யிலும்,… (READ MORE)

Manakkudi Talkies

, ,

மகளிர் கால்பந்து படம்

மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதையில் பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சக்தே’. அதே கதையை மகளிர் ஹாக்கிக்குப் பதில் மகளிர் கால்பந்தாக மாற்றி, பயிற்சியாளராக வருபவருக்கு சில ஆக்‌ஷன் மசாலா சங்கதிகள் சேர்த்து அரைத்து, கூடவே சில கிளை கதையொன்றையையும் பின்னி வைத்தால்… அது ‘பிகில்’ ஆக… (READ MORE)

Uncategorized

தண்ணீர் தேங்கி நின்றால்

தண்ணீர் தேங்கி நிற்கிறதென்றும் சூழலை ஒழுங்காக வைத்திருக்கவில்லையென்பதாலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது ஒரு பள்ளிக்கு. ‘தண்ணீர் தேங்கியுள்ளது’ என்று சென்ற ஆண்டு இப்படி டெங்கு அபராதங்கள் விதித்த சில நாட்களில் மழை வந்து ஊரே தண்ணீர்க்காடாகி கிடந்தது, ‘உங்களுக்கு யாரு இப்ப அபராதம் போடறது?’ என்று மக்கள் நினைக்கும் படியானது. அபராதம்… (READ MORE)

Uncategorized

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்

நான் ஓர் ஆசிரியன், வாழ்வியல் பயிற்சியாளன். வளர்ச்சியைக் கண்டுபிடித்து நல்லதைக் கண்டுபிடித்து அடுத்தவர்க்கு விருது வழங்கி மகிழ்வித்து மகிழ்பவன். விருது வழங்கப்படும் எத்தனையோ விழாக்களில் விருதாளர்களையும் அங்கம் வகிப்போரையும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நோக்கி நகர வைக்க உரை நிகழ்த்துபவன். கலந்து கொள்ளும் இடங்களில் உரையாற்றி முடிந்ததும் அவர்கள் பெயரும் எனது பெயரும் பொறித்த ‘ஷீல்டு’ நினைவுப்… (READ MORE)

Uncategorized

இழந்ததை நினைத்து அல்ல, கிடைத்ததை நினைத்து…

08.20க்கு என் விமானம், 07.20க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனக்கு முந்தைய பேச்ணாளர்களால் நிகழ்ச்சி தாமதமாகி நான் என் மலர்ச்சி உரையை முடிப்பதும் குறித்த நேரம் தாண்டிப் போனது. நிகழ்ச்சி முடித்து என்னைக் காரிலேற்ற லீ மெரீடியனிலேயே 07.05 ஆகிவிட்டதால் அடித்துப் பிடித்து ஓட்டி வந்தார் டிரைவர். ஓடி வந்து போர்டிங் பாஸ்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே ஆரூடம் சொல்பவருக்கு, உலக நிதர்சனம் சொல்ல வேண்டியிருந்தது

‘இருவது நிமிஷத்துல நாலு பேருட்ட நாலு வாட்டி சொல்லிட்டேன். அதுக்கப்புறந்தான் தண்ணி தர்றீங்க. வந்து உக்காந்த உடனே தண்ணி வைக்கனும். அதுதான் சர்வீஸு. சாப்பாடு நல்லாருக்கு. காப்பி அருமை. ஆனா, தண்ணி தர மாட்றீங்க. முதல்ல ஒரு க்ளாஸ் தண்ணி தரனும்! முதல்ல தண்டி தம்ளர்ல…’ ஒரு வரியில் வெளிப்படுத்த வேண்டிய இந்த சங்கதியை ஒன்பதே… (READ MORE)

Uncategorized

தமிழ் தமிழகப் பற்று!

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கின் இந்திய வருகையை சென்னையையொட்டிய மாமல்லபுரத்தில் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயல்கிறார் பிரதமர் மோடி. வழக்கமாக தில்லியில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் தெற்கே தமிழகத்தில் நிகழ்த்தப்படுவதற்கு இரு காரணங்கள். ஒன்று – சீன அதிபர் தில்லியில் இறங்கியதும் அவர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் தலாய்… (READ MORE)

Uncategorized

எப்போதும் vs எப்போதாவது

திருவண்ணாமலைக்கு பயணித்த வழியில் தேநீருக்கு இறங்கிய திண்டிவனம் நெடுஞ்சாலைத் தேநீர் கடையில் எவரோ ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஏ… ஒரு மாசம்… ஒரு மாசம் ஃபுல்லா எதுவும் தொட மாட்டோம் பாத்துக்க. பொரட்டாசி மாதம்! முழு சுத்தமா இருப்பமே நாங்க!’ ‘நாங்க கூடத்தான், சபரிமலைக்கு மாலை போடும் போது!’ …. ‘எப்பவுமே எல்லா மாசமுமே… (READ MORE)

Uncategorized

images-24355356548042766525..jpg

‘அசுரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கொண்ட குடும்பத்திற்காகத் தன்னைத் தந்து அடங்கி ஒடுங்கி வாழும் நெல்லைச் சீமை மனிதனொருவனின் வாழ்வில் ஏற்படும் சில சம்பவங்களால் குடும்பமே குலைந்து போக, உணர்ச்சிப் கொந்தளிப்புகளுக்கிடையே கைப்பிடித்து ஓடி ஓடி குடும்பத்தைக் காத்து நிற்கும் அவனது கதையை ரத்தமும் சதையுமாக ஒரு நேர்த்தியான கதை சொல்லி அருமையாக சொன்னால் – ‘அசுரன்’ கொடுத்த விதத்தில் பொறி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

அளவில்லாமல் அடாவடி செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்! : பரமன் பச்சைமுத்து 

திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையொன்றில் இரவில் கன்னம் வைத்து கொள்ளை நடந்துள்ளது என்ற ஒரு செய்தி படங்களோடு முதலில் கட்செவியஞ்சலிலும் ஊடகங்களிலும் அடுத்த நாள் செய்தித் தாள்களிலும் வந்தன. முகமூடியணிந்த கொள்ளையர்களின் கண்காணிப்புக் கேமரா படங்கள், துளையிட்ட சுவரின் படம் என எல்லாமே வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டன. அடுத்த நாள் கடையின் உரிமையாளர் சென்னையிலிருந்து… (READ MORE)

Uncategorized

தினம் காமராஜர்

எப்போதும் காமராஜரைப் பற்றியே பேசுபவனுக்கும் எண்ணுபவனுக்கும் காமராஜர் தினம் இல்லை,… ‘தினம் காமராஜர்!’ பெருந்தலைவருக்கு மலர்ச்சி வணக்கம்! – பரமன் பச்சைமுத்து 02.10.2019

Uncategorized