Monthly Archive: September 2022

‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ – திரை விமர்சனம.்: பரமன் பச்சைமுத்து:

எழுபதாண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய கதையை நாற்பதாண்டுகளாக முயற்சித்து கடைசியில் திரைக்கதை செய்து இயக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். ‘ப்யூட்டி அண்ட் த பீஸ்ட்’ ‘ஸ்பைடர் மேன்’ ‘அலாவுதீன்’ போல நாவல்களை அப்படியே திரை மொழிக்கு மாற்றும் முயற்சி போல கல்கியின் மூல கதையையும் வசனங்களையும் தொன்னூறு சதவீதம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

அமெரிக்கர்களைப் போல இங்குள்ளவர்களுக்கும் வருகிறதே அல்சைமர் நோய்?

கேள்வி: அமெரிக்கர்களைப் போல இப்போது இங்குள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறதே அல்சைமர் எனும் மறதி நோய். நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை விட்டதால்தானே இந்த நோய் வந்துள்ளது? பரமன்: ஒரு மருத்துவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியை நமக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வந்த அல்சைமர் நோய் உணவு சீர்கேடால் இந்தியர்களுக்கும் வருகிறது என போகிற போக்கில்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

சூப்பர் ஸ்பீடில் பாஸ்போர்ட் வருகிறது

👏👏என்ன நடக்கிறது இந்தியாவில்! பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது. வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில்… (READ MORE)

பொரி கடலை

, ,

செந்தாமரை

‘கருமாரப்பட்டி எப்ப வந்த நீ கடைசியா?’ (மீனாட்சி) ‘தர்மலிங்கம் அப்பா இருந்தாரு அப்போ. பக்கத்துல நாய்க்கர் வீட்டில் உட்கார்ந்து கூட பேசினோம். இல்ல, அதுக்கப்புறம் ஒரு தடவ வந்தேன்!’ (பரமன்) ‘ரொம்ப நாளு ஆச்சு!’ ‘ மங்கலட்சுமின்னு ஒருத்தவங்க இருந்தாங்களே! அவங்க எங்க?’ (பரமன்) ‘குன்றத்தூர்ல இருந்துச்சி. செத்துப் போச்சி!’ (செந்தாமரை) ‘செத்துட்டாங்களா? எங்களுக்கெல்லாம் தெரியவே… (READ MORE)

அம்மா

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

31வது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை18.09.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1663333498208.jpg

‘கார்கி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தானுண்டு தன் ஆசிரியப் பணி உண்டு என்று வாழும் இன்னும் சில நாட்களில் திருமண நிச்சயம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தைத்தொடங்கப்போகும் ஓர் எளிய குடும்பத்து மகளொருவள் பணிக்கு சென்ற தந்தையைக் காணோமெனத் தேடிப் போகையில் கிடைக்கும் செய்திகள் கேட்டு பதறி, குஞ்சைக் காக்க வல்லூரையே எதிர்க்கத் துணியும் கோழியாய் தவித்து எழுகிறாள்.  உலகமே… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது. இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’… (READ MORE)

பொரி கடலை

மாணவர்களுக்கு காலையுணவு : நல்ல திட்டம்

தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்திருக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலையுணவு திட்டம் மிக மிக சிறப்பான திட்டம். புதுவை மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதே, இது தமிழகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தோம். புதுவை திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட திட்டமாக இது உள்ளது. சிறப்பாக நனைமுறைப்படுத்தப் படட்டும். மாணவர்கள் பயன் பெறட்டும்!… (READ MORE)

Politics

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

நெல் தெளிக்கிறோம் நேரடியாய்…

காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று.  அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா. படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வத்துவிடுகிறது

பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.இரண்டொரு… (READ MORE)

பொரி கடலை

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில். சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். உயர்… (READ MORE)

பொரி கடலை