Monthly Archive: August 2016

‘ஜோக்கர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வந்தால்,  ‘ஐம்பது கோடி எல்லாம் ஒரு பெரிய ஊழலா அவரவர்கள் பதினேழு லட்சம் கோடிக்கு பண்ணுகிறார்கள், போய்யா! கேவலமா இருக்கு!’ என்று  சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் மனநிலையால்,  பின்தங்கி கிடக்கும்  பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் வெளி உலகம் அதிகம் அறியா ஒரு மன்னர்மன்னனின் வாழ்க்கை… (READ MORE)

Uncategorized

சுடச்சுட குடிக்க

​ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க,  செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர். #ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர்  (வெளியில் வரும் போது எழுதியது)  Facebook.com/ParamanPage

Uncategorized

ரொடீனிய பூமிப்பரப்பு 

​துண்டு துண்டாக உடையாமல் ஆழி சூழ ஒரே நிலப்பரப்பாக ‘ரொடீனியா’வாக இருந்த இந்தப் பூமிப்பரப்பு அப்படியே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும், சிட்னிக்கும் சைக்கிளிலில் சென்றிருப்பார்கள் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்து தனுஷ் போல.  ராயப் பேட்டை நண்பர்கள் குழு ரியோ ஒலிம்பிக்ஸ் பார்க்க ராயல் என்ஃபீல்டில் கிளம்பியிருக்கும். ஆனால் அப்போது ராயப்பேட்டை மடகாஸ்கரில்… (READ MORE)

Uncategorized

நண்பன் என்றதும்…

​ஊரின் ஒதுக்குப்புறமாய் குளத்து மூலையில் எங்கள் வீடு இருந்தது அப்போது. வீட்டு வாசலில் எப்போதும் தண்ணீர் ஓடும் ஒரு சிறு வாய்க்கால். ஒரு மரத்தை குறுக்கே போட்டு பாலமாக மாற்றி வைத்திருந்தார் அப்பா. பின்புறம் செட்டியாரின் வயல். அந்த என் அரைக்கால் சட்டை வயதின் பொழுதுகளில் பெரும்பாதி ஆளவந்தாரால் நிரப்பப்பட்டவை. மூன்று வீடுகள் தள்ளி இருந்த… (READ MORE)

Uncategorized