Monthly Archive: September 2019

வாஞ்சி மணியாச்சி

நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரயில்நிலையத்தில்தான் புரட்சி செய்தான் வாஞ்சி.திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பிரித்தானிய கலெக்டர் ஆஷ்ஷை, இதே மணியாச்சி ரயில் நிலைய மேடையில் உலாத்தியபடியே கவனித்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான் புரட்சியாளன் வாஞ்சி.வெகுகாலத்திற்குப் பிறகு மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் மாற்றம் செய்ய… (READ MORE)

Uncategorized

இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

தூத்துக்குடியில் இறங்கிக் கால் வைக்கும் போது… உலகின் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியாகும் இடம், வ.உ.சியின் சுதேசிக் கப்பல், கிரேக்க தாலமி குறிப்புகள், எரித்ரேயன் பெரிப்லஸ், ஆதிச்ச நல்லூர், மார்க்கோ போலோ குறிப்பிட்டிருந்த முத்துக் குளித்தல், ஆதிகுடி மக்களான வலையர் குல மக்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி, பரதவர்கள் வணங்கும் பனிமயமாதா, அனுமனை சீதையைத் தேட… (READ MORE)

Uncategorized

நடிகர் விஜய்யின் அப்பா, ஆளுஞர் தமிழிசை அவர்களோடு பயணித்தத் தருணங்கள்

நேற்று இரவு மலர்ச்சி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி ஒரு குறிப்பை சொல்லிவிட்டு, அதிகாலை தூத்துக்குடி விமானத்தில் ஏறி அமர்ந்தால், எனக்கு முன்னிருக்கையில் மேதகு ஆளுநர் – தெலுங்கானா திருமதி தமிழிசை சௌந்த்தரராஜன் அவர்கள். உள்ளே நுழைந்த உடனேயே குட்மானிங் மேடம், யு ஆர் இன்ஸ்பயரிங்!’ என்று நான் சொன்னதை புன்னகைத்து தலையசைத்து ஏற்றுக்… (READ MORE)

Uncategorized

நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க

‘திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ‘மகளிர் தின விழா’வில் பேச வந்திருந்தார் பரமன் பச்சைமுத்து அவர்கள். உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் பரமனிடமே ‘பரமன், எப்ப நான் உன்னை சேல்ஸ்ல ஜெயிக்க முடியும்?’னு கேட்டாராம். ‘நீ முடிவு பண்ற அன்னைக்கு!’ என்று பரமன் பதில் சொன்னாராம். இது நிகழ்ச்சியில்… (READ MORE)

Uncategorized

பொதினா புளித் துவையல்

உணவில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது அரைத்த துவையல்களை சட்னிகளை வழித்துச் சுவைப்பவன் நான். அப்படியொரு துவையலோடு வந்திருந்த என் வீட்டு மதிய உணவை இன்று பிரித்த போது உடனிருந்த சில அன்பர்களோடு பகிர நேர்ந்தது. ‘ஐயோ… சூப்பரா இருக்கே! இது என்ன துவையல் பரமன்?’ என்பது அனைவரின் பொதுக் கேள்வியாக இருந்தது. அவர்களுக்குப்… (READ MORE)

Uncategorized

images4896631818316080130.jpeg

‘ஒத்த செருப்பு ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலைத் தொடர்பாக ஒருவனைப் பிடித்து வந்து ஒரு காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கையில் அந்த ஒருவன் வெளிப்படுத்தும் சங்கதிகளால் உருவாகும் ஒரு கலவையான அனுபவத்தை ஒரு முழுப்படமாக வடித்து ஒரே ஓர் ஆள் மட்டுமே நடித்து ஒரு மிரட்டலோடு அதைத் தந்தால் – ‘ஒத்த செருப்பு’ இரண்டு மணி நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , ,

சிங்க முக யாளி

காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கி விட்டு் ‘பாவை மன்றம்’ முன்னே நின்று மாதவியை கலியன் ஆசிரியர் விளக்கிய போது, அரைக் கால்சட்டை அணிந்த மூன்றாம் வகுப்புப் பையனாகிய நான் அந்தச் சிலைகள் உயிர் பெற்று நிற்பதைப் போல் அதிசயித்தேன். கோவலனையும் சேரன் செங்குவட்டுவனையும் இளங்கோவடிகளையும் தொட்டு, ‘டாய் பரமன் தொடக்கூடாது!’ என்று இரண்டாம் வகுப்பு எண்ணாவரம் வாத்தியார் சொன்ன… (READ MORE)

Uncategorized

அன்பென்பது பிரஞ்ஞை கடந்தது

கோவை விமான நிலையத்தில் ஒரு வசதி, விமானத்திலிருந்து இறங்கி தனிப் பேருந்தில் பயணித்து விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானம் விட்டு இறங்கி நடந்தே விமான நிலையம் வந்து பேக்கேஜ் கலெக்‌ஷன் பெல்ட்டிற்கு வந்து விடலாம். இன்று கோவையில் விமானத்திலிருந்து இறங்கும் போதே கண்ணை ஈர்த்தது ஒரு நிகழ்வு. இதே விமானத்தில்தான் வந்திருக்க வேண்டும் அவர்கள்…. (READ MORE)

Uncategorized

மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது!

புளிக்கு ஜிஎஸ்டி இல்லை, பெருநிறுவன வரிகள் குறைப்பு, பங்குச்சந்தை குறியீடு உயர்வு என்று ஊடகங்கள் கொண்டாடும் வேளையில் கொண்டாட முக்கிய மற்றொன்றும் இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால், சென்ற மாதம் மைதானமாகக் காட்சியளித்த புழல் மற்றும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது! மழையே நன்றி!… (READ MORE)

Uncategorized

தினமணிக்கு மலர்ச்சி வணக்கம்

கடலூரை சொந்த ஊராகக் கொண்ட அவர் தினமணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடரை எழுதினார், பின்னாளில் நூலாக வந்து அவருக்கும் சாகித்ய அகாதெமி விருதினை தமிழுக்கும் வாங்கித் தந்தது. அந்த புதிய எழுத்தாளர் பின்னாளில் ஜெயகாந்தன் என்ற ஆளுமையாக அறியப்பட்டார். லால்குடிக்காரரான ராமாமிர்தம் தினமணியில் ‘சிந்தா நதி’ என்ற தொடர் எழுதினார். பின்னாளில்… (READ MORE)

Uncategorized

,

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’ புதிய கிளையை திறந்து வைப்பதற்காகப் சாலையில் பயணித்து குண்ட்டூர் சென்று இறங்கியதும் எனை நோக்கி வைக்கப்பட்ட, நான் எதிர் கொண்ட முதல் கேள்வி. கடவுளுக்கு ‘தேவுடு!’ என்கிற வார்த்தையை மட்டும்தான் நான் அறிவேன். அதுவும் என்டிஆரை மக்கள் அப்படி விளிப்பார்கள் என்பதாலும், ரஜினி படத்துப்… (READ MORE)

Uncategorized

ரேய் துஸ்லிகா பச்சிடிரா’

‘ரேய் துஸ்லிகா பச்சிடிரா’ ‘க்கோர்சிக்கிடிக்காய் பச்சடி தீஸ்கோண்டி’ ‘மஜ்லிகா புளுஸு’ இந்தச் சத்தங்கள் நிறைந்த அந்த உணவகத்தினுள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். திருப்பதி போகும் போதெல்லாம் மினர்வா கிராண்டில் அல்லது மயூராவில், பெங்களூருவில் நாகார்ஜுனாவில், வேறு வழியில்லாத போது சென்னையில் அமராவதியில் என்ற அளவிலேயே ஆந்திர சாப்பாட்டைப் பற்றிய அனுபவங்கள் கொண்ட நம்மை ‘ஆத்தன்டிக் அக்மார்க்… (READ MORE)

Uncategorized

வெப்ப பூமி வளமான கதை – முதலிப்பட்டி, விளாத்திகுளம் வேம்பு சக்தி இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முதன்மையாகக் கொண்ட ஒரு சிற்றூர் முதலிப்பட்டி. வானம் பார்த்த பூமியான முதலிப்பட்டியில் 15 ஏக்கர் அளவுள்ள கண்மாய் இருந்தும், 8 ஏக்கர் துர்ந்து மேடாகி கருவேல மரங்களால் நிறைந்தும், மீதியுள்ள 7 ஏக்கர் சேறு சகதியுமாகவும் ஆகிப் பயன்பாட்டிற்கு அருகதையற்றுப்… (READ MORE)

Uncategorized

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு? புதுச்சேரியில் மலரவர் கோவிந்தராஜுலு மகன் திருமணத்திற்குப் போன இடத்தில், ‘பரமன், யு ஷுட் ட்ரை திஸ் ப்ளீஸ்!’ என்று பரிந்துரைத்தார்கள். வெற்றிலையில் விளக்கேற்றி நதியில் விடுவது போல் வெற்றிலையை விரித்து பீடா சங்கதிகள் இட்டு ‘பட்’டென்று பற்ற வைத்து நெருப்போடு நம் திறந்த வாய்க்குள் தள்ளுகிறார்கள். ( நம் சிவவேலன்… (READ MORE)

Uncategorized

தமிழ் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்

ஓர் இனத்தின் அழிவில் மட்டுமல்ல, உறவின் முறைகளை விளிக்கும் வழக்குச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்களால் மாற்றப்படும் போதும் தேயத் தொடங்குகிறது ஒரு மொழி. உறவின் முறைகளை தங்கள் மொழிச்சொற்களிலேயே விளிக்கும் போது விழுதுகள் விடுகின்றது மொழி. ஓர் இனத்தின் மக்கள், உறவுகள் அவ்வப்போது அல்லது விழாக்களில் கூடும் பொழுதுகளில் தங்களுக்கான முறைகளைத் தொடரும் போது பெருமளவில்… (READ MORE)

Uncategorized

கொழும்பில் ஒரு சிறு பெண்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தொடங்கி ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்…’ என்ற பதிகத்துடன் ஒரு பள்ளியின் நிகழ்ச்சி தொடங்கினால் எப்படியிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு! கொழும்புவில் உள்ள முக்கிய மகளிர் கல்லூரியான ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்விலும் சரி, சில தினங்களுக்கு முன்பு நாவலப்பிட்டியவில் கதிரேசன் மத்திய கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும்… (READ MORE)

Uncategorized

ரஜினி கட்சி தொடங்கினால்…

ஜனவரி 2020க்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்கினால் என்ன செய்வார்கள் இவர்கள்! தொடங்கிவிடுவார் போலத் தோன்றுகிறது. – பரமன் பச்சைமுத்து நாவலப்பிட்டிய, கண்டி, இலங்கை 06.09.2019

Uncategorized