Monthly Archive: November 2014

Thumbnail - Poojaiyarikkurangu - Copy

பூஜையறைக் குரங்கு…

வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)

Religion, ஆ...!

,

Fury

Fury – Movie review : Paraman Pachaimuthu

A Super scene – Movie Clip here – CLICK HERE to see VIDEO ‘கொள்கையாவது, குடைமிளகாயாவது, உயிர்தான் முக்கியம். கொல்லப்படாமல் இருக்க, கொல்வது முக்கியம்’ என்று எதிலும் பிடிப்பில்லாமல் மூர்க்கமாய் போர்த்தொழில் புரிந்து வாழும் ஒரு குழுவிற்குள், ‘இதெல்லாம் என் கொள்கைக்கு எதிரானவை, செய்யமாட்டேன். என்னை வேண்டுமானால் கொன்று போடு. கொல்லமாட்டேன்…. (READ MORE)

Manakkudi Talkies

, ,

sachin

சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்

வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)

பொரி கடலை

, , ,

மழைநேர மனசு

‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)

ஆ...!

, , , , ,

Rajini Award

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

எருமைமாடும், ஏரோப்ளேனும்…

“எருமைமாடு கூட ஏரோப்ளானில் இடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற மாநிலம் எங்கள் மாநிலம்!” – என்று சொல்வார்களோ! #Aircraft 737 hit a buffalo in its takeoff roll in Surat(Gujarat) and got damaged – News

பொரி கடலை

,

நாய் பேசுமா?

என்ன சொன்னாலும், ‘லொள்’என்றே சப்தமெழுப்பும் நாயை ‘லவ் யூ’வென சொல்ல வைக்க முடியுமா? முயன்றிருக்கிறார் ஒருவர். பாருங்களேன். (வாட்ஸ் அப்பில் வந்தது)

பொரி கடலை

பேசிப் பேசி…

பேசிப் பேசி தீர்வு காணலாம். பேசிக்கொண்டு மட்டுமே இருந்தால், பேசிப் பேசி சோர்வு காணலாம். வெறும் பேச்சு மட்டுமே போதாது வேலையில் இறங்குங்கள், வெற்றி வேண்டும் நமக்கு!

ஆ...!

Kaththi

‘கத்தி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அந்தக் காலத்தில் மிகப் பெரிய ஹிட்டடித்த ‘வாணி – ராணி’, எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ரஜினியின் ‘ராஜாதிராஜா’ ‘அதிசய பிறவி’ ரக சாதுவான நல்லவர் ஒருவரின் இடத்தில், அவரைப் போலவே உருவம் கொண்ட பொல்லாதவர் வந்து உட்கார்ந்து ஆடும் அதே ஆள்மாராட்ட ஆக்ஷன் கதை, புதுக்களம் என்ற ஆயில் பிரிண்ட் போடப்பட்டிருக்கிறது. உழுதுண்டு வாழ்ந்தவர்கள்… (READ MORE)

Manakkudi Talkies

இப்படிக்கு, இக்கால மனிதன்…

நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

Naan Mangalyaan Feb1st

நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே. பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய… (READ MORE)

Media Published, Self Help

, , , , ,

People will behind you - infinithoughtsJuy2014

Yes, People will speak behind you

[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us.  Feel like earth should break, open wide and feel… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , , , , , , , ,

தெருச்சந்தி பிள்ளையார் படம்

கடவுள் நம்பிக்கையில் அல்ல, யாரும் குப்பை போட்டு சிறுநீர் கழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தொங்க விடப்படுகிறது தெருச் சந்தி சுவரில் பிள்ளையார் படம்! : பரமன் பச்சைமுத்து

Uncategorized

தஞ்சையில்…

என்னை மலைத்துப் போகச் செய்த, மனங்கவர்ந்த மாமன்னன் ராஜராஜனின் மண்ணில், ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன். வந்தியத்தேவனும், குந்தவை தேவியும், வீரநாச்சியாரும், பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!  

பொரி கடலை

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,

சதாப்தி

ஃப்ளாஸ்க்கில் சுடு தண்ணீர், சாஷேயில் அமுல் பால் பவுடர், சக்கரை, காஃபித் தூள் தனித்தனியே தரப்படுவதை பிரித்து கலக்கும் வேளையில் புரிகிறது மனைவியின் அருமை! (ஷதாப்தி ட்ரெயினில்) :பரமன் பச்சைமுத்து [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!

மனைவி படிக்கிறாள்

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)

ஆ...!, கவிதை

,

போகி என்றொரு பெயரில்,

போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பை எதையாவது போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி பெரியவர்கள் மூச்சுத்திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! ‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு, புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை,… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

பவர்…

கடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்! எப்படி இருக்கும் எனக்கு! நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)

ஆ...!, கவிதை

,

இலங்கையில் பிறந்து தமிழர்கள் இதயத்தில் வாழும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்… தமிழ் சினிமாவிற்கு நேச்சுரல் லைட்டிங் பார்க்கப் புதிய கண்களைத் தந்தவனே, நீ செல்லுலாய்டில் எழுதிப் போனது, தமிழ் சினிமாவின்  ‘அழியாத கோலங்கள்’, கமல், ஶ்ரீதேவி, அர்ச்சனா, ஷோபா,  பாலா, வைரமுத்து, சசிகுமார், தனுஷ், வெற்றிமாறன்… என்று தேசியவிருது குவிப்போர் அனைவரும், உன்னோடு கைகோத்தோர் அல்லது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

ஸெல்ஃப் மேட் மேன்…

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

Soorasamharam

இன்று சூரசம்ஹாரம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

தீபாவளி மழை

பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா, வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே, பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ, இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது, சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி… இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம். முதலில் நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா என்று  கவலைப்படுமளவிற்கு விடாமல் பேய்… (READ MORE)

ஆ...!

, ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்

குளிர்காலக் காலையிலும் குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால், ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது அல்லது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக!   :பரமன் பச்சைமுத்து

ஆ...!

,

தீபாவளி புடவை வாங்கும் படலம்

கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும், தூரத்திலிருப்பதைப் பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது புடவைக் கடையில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு! #தீபாவளி புடவை வாங்கும் படலம் #மனைவியோடு கடையில்

ஆ...!, கவிதை

, ,

செப்டம்பர் 17

சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில்  பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து

Politics, ஆ...!

, , , ,

வாரும் மகாபலி…

வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)

Religion, ஆ...!, கவிதை

, , , ,

தலுவை

நெற்றியில் திருமண், இடுப்பில் ஒரு சுற்று சுற்றி செருகிய வெள்ளைத் துண்டு, கையில் பளபளவென்று துலக்கப்பட்டு துளசி சுற்றப்பட்ட பித்தளைச் செம்பு, அந்த வயதிற்கேயுரிய பிடுங்கித் தின்னும் வெட்கம் சகிதமாய் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் ‘ நாரயண கோபாலா…’ என கூவிக்கூவி அரிசி சேகரித்து அம்மாவிடம் தந்த அரைக்கால் சட்டை பொழுதுகள் கிராமத்து கட்டாயங்கள் வந்து… (READ MORE)

Uncategorized

தலைவன்

‘பெரிதாய் பேசுகிறவர்கள் செயல் திறனிலும் சிறப்பாயிருப்பார்கள், பேசாமலே இருப்பவர்கள் பெரிதாக எதையும் செய்யமாட்டார்கள்,’ என்றெண்ணி இறங்கிய தலைவன் இழப்பது அதிகம். தலைவனுக்கழகு திறன் அறிந்து நடத்துதல்.   – பரமன் பச்சைமுத்து

ஆ...!

, ,

Eid Mubrak

Eid Mubarak!!!

    எல்லாம் வல்லவனே,என்னைப் படைத்தவனே…எல்லாவற்றுக்கும் மேலானவனே, எல்லை இல்லாதானே…அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்தஅருட்பெருங்கடலே… வெறும் இந்திரியத் துளியிலிருந்து கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே… ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே! நன்றி! உணவை, பானத்தை, இச்சையை துறந்து இறையெண்ணம் வளர்த்து தூய்மை கொள்ளும் ஈகைப் பெருநாளில் வணங்கித் தொழுகிறேன் இறைவா! நல்வழிப்படுத்து,… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

,

தந்தை மனம்

செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில். இரை  தவிர்த்து  இறை  தேடி ஓடும்  நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க. கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது ” கவிதை எழுதிய கவிதை!” :பரமன் பச்சைமுத்து

கவிதை

, ,