புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி நினைவுகள்

புவனகிரி நினைவுகள்: நெடுஞ்சாலைப் பயணத்தில் இருக்கிறேன். பண்பலையில் ‘ஏய்ய்ய்…. உன்னைத்தானே!’ பாடல் ஒலிபரப்பாகிறது. எஸ்பிபியை வித்தியாசமாக வெளிப்பட வைத்த இளையராஜாவின் சூப்பர் இசைப் பாடல். புவனகிரி பள்ளி, பத்தாம் வகுப்பு, ஏகே சீனிவாசன், கோவிந்தராஜூலு சன்ஸ் ஜோ, போலீஸ்காரர் மகன் பரமகுரு, பாலு, இலைக்கடை சங்கர், மணக்குடி பாலசரவணன், பாளையக்காரத் தெரு செந்தில், அவல்பட்டறை சோலையப்பன்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21* *புவனகிரி பள்ளி: நிறைவு* திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம். ‘பள்ளி நினைவுகளை… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’* *’புவனகிரி பள்ளி:’* ( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர்.  புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர். தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19 புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’ 🌸 புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா? ‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

18 : ‘புவனகிரி பள்ளி : தறி கூடம்’

*18* *’புவனகிரி பள்ளி : தறி கூடம்’* புவனகிரி பள்ளி அரசுப் பள்ளிதான், ஆனால் அதில் இங்கிலீஷ் மீடியம் இருந்தது தெரியுமா உங்களுக்கு? … (சென்ற பதிவைப் படித்து விட்டு ‘பன்னு ராமலிங்கம் கூரை மேல உட்கார்ந்தது, இந்த ரெண்டு பேரு இறந்து போனது பத்திதான் அப்ப மொத்த புவனகிரியும் பேசிச்சு பரமன்!’ என்று இ… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’17: ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’

17 ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’  புவனகிரியில் ஓடுவது சுவேத நதி என்கிறார்களே? உண்மையா?…..  புவனகிரி பள்ளியில் படித்த ஜெயக்குமாரை தெரியுமா உங்களுக்கு? மொத்த புவனகிரிக்கும் தெரியும் அவனை. நான் ஒரேயொரு முறை புவனகிரி பள்ளியில் அவனை பார்த்தாக நினைவு. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் ( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’ சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!) … சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

15: புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

15 புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார் (சென்ற பதிவில் நாராயண ஐயர் ஹோட்டல் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு ‘கணேஷ் பவன்’ ‘துர்கா பவன்’ என வேறு வேறு காலகட்டங்களில் அவ்வுணவகம் கொண்டிருந்த வேறு பெயர்களையும் இயங்கிய வேறு வேறு இடங்களையும் குறிப்பிட்டு நெகிழ்ந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

14 புவனகிரி பள்ளி

*14* *புவனகிரி பள்ளி* புவனகிரி ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ தெரியுமா, உங்களுக்கு? …. (விளையாட்டாக புவனகிரி பள்ளியில் என்னோடு படித்த வகுப்புத் தோழர்கள் கொண்ட கட்செவியஞ்சல் குழுவிற்காக நாம் எழுதத் தொடங்கிய இந்த ‘புவனகிரி பள்ளி’ தொடர் வெளியிலும் பகிரப்பட்டு பல வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது. அதில் மிக முக்கியமானவை இரண்டு. ஒன்று – தமிழாசிரியர்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

13: புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்

*13* ( சென்ற பதிவைப் பார்த்துவிட்டு ‘யார் அந்த சேரன்?’ என்று பெங்களூரில் இருக்கும் ஸ்ரீதர் திரிசங்கு உட்பட பலரும் கேட்டிருந்தனர். ‘சேரன்’ என்பது மாற்றப்பட்ட பெயர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  சென்ற வாரம் புவனகிரிக்கு வந்திருந்த போது புவனகிரி பள்ளி மாணவர்கள் பலரை வெள்ளியம்பலம் சுவாமி மடம் கோவிலில் வரவழைத்து ஒரேயிடத்தில் நிறுத்தி இன்ப… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

12 : ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

12 ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’  ( சென்ற பதிவில் ‘வாரியார் – கி வீரமணி – புவனகிரி பள்ளி’பற்றிப் படித்துவிட்டு, ‘புவனகிரி இறை பணி மன்றத்தின் நோட்டீஸ்களை எங்கள் ஐயப்பன் அச்சகத்தில்தான் நாங்கள் அடித்துத் தருவோம். உங்கள் தொடர் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. தொடரட்டும்!’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

11. ‘புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்

*11* *’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்* (புவனகிரி பள்ளி பற்றிய நம் பதிவுகளை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் தகவல் அனுப்பியிருந்தார், ‘ரஜினி புவனகிரி வந்த போது, அந்த மேடையில அவருக்குப் பின்னாடி நின்னது நானும் புவனகிரி மெடிக்கல்ஸ் கணேஷும். நாங்க புவனகிரி ரஜினி ரசிகர் மன்றம் நடத்துனவங்க’ என்று. (நாளைக்கு ரஜினி… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி பள்ளி : புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை

*10* *புவனகிரி பள்ளி : புவனகிரி வைணவ வரலாற்றில் உள்ளது* வைணவத்தின் பிரிவான மாத்வத்தில் புவனகிரி ஒரு புன்னிய பூமி என்று போற்றப்படுகிறது தெரியுமா? புவனகிரி பள்ளியில் ‘கடவுளை மற, மனிதனை நினை!  அழும் குழந்தைக்குப் பால் இல்லை, பாழுங்கல்லுக்கு பாலா?’ என திராவிடர் கழக பற்றாளராக தீவிர நாத்திகம் பேசிய ஆசிரியர் ஒருவர் இருந்தார்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

9. புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:

*9* *புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:* ( சென்ற பதிவை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் (புவனகிரி நாராயண ஐயர் ஹோட்டல்) தனது பள்ளி நாட்களை திரும்ப வாழ்ந்ததாகவும் அவரது நண்பரகள் பதிவை படித்து மகிழ்ந்ததாகவும் குரல் பதிவு அனுப்பியிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் சரவணன் மகிழ்ந்து எழுதியிருந்தார். … (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

8 புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்  (புவனகிரி பள்ளியின் இதயமான ‘க்ரவுண்ட்’ பற்றிய நம் முந்தைய பதிவைப் படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரும் முனைவருமான சரவணன் (புவனகிரி பள்ளி மாணவர்) தமது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார். முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அசோக மரமும் பச்சைப் பைப்பும்’ பதிவைப் படித்துவிட்டு,… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

7. புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:

7 புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்: புவனகிரி பள்ளியின் இதயம் எது என்று பழைய மாணவர்களைக் கேட்டால், இதையே சொல்வார்கள்! ‘எதை?’ என்று பார்ப்பதற்கு முன் பழைய மாணவர்கள் என்று நாம் குறிப்பிடும் வகையினர் எவர் என்பதை சொல்லியாக வேண்டும். … புவனகிரி கடைத்தெருவில் ஜெயா காப்பிக்கு எதிர்ப்புறம் ஆசியா சைக்கிள் மார்ட்டுக்கு… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

6. புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்

…. சென்ற பதிவில் புவனகிரியைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னதை விட, என்சிசி வாத்தியார் நடராஜன் பற்றி பின்னூட்டம் அனுப்பியவர்களே அதிகம். சிலர் சரியான விடையை எழுதியிருந்தார்கள்.  ‘பள்ளிக்கு வடமேற்கே’ என்று சொன்ன பதில் தவறானது. வடமேற்கே இருந்தது புதர்கள் அடர்ந்த கருவக்காடு. (இன்று அதுவும் இல்லை. அழிக்கப்பட்டுவிட்டது) பள்ளியின் வடகிழக்கே இருந்தது வரலாற்றில் இடம்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

புவனகிரி பள்ளி – என்சிசி வாத்தியார்

*5* *புவனகிரி – பள்ளி* ( சென்ற பதிவில் புவனகிரி பள்ளியின் டிஜே எனப்படும் ஜெயராமன் ஐயா பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு மகிழ்ந்து அமெரிக்காவிலிருந்து அவரது மகன் ஒளி, குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பதிவை ஜெயராமன் ஐயாவிற்கு வாசித்துக் காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் மகிழ்ச்சி! வாழ்க! ) ‘புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது  தெரியுமா?’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

இரு திரையரங்குகள் : புவனகிரி – 3

*3* *புவனகிரி – பள்ளி* போன பதிவைப் படித்து விட்டு புவனகிரி ‘ஆபிதா வீடியோ விஷன்’ பற்றி  ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் உட்பட சிலர் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.  ‘இப்படி ஒன்று இருந்ததா?’ என்று கேட்டும் எழுதியுள்ளனர். இதற்கு பதிலாக சிறு குறிப்பு வரைய வேண்டுமானால் ஆபிதா வீடியோ விஷன் இருந்த காலத்தை முதலில் சொல்லியாக வேண்டும்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி பள்ளி – 2

*2* *புவனகிரி பள்ளி* ( சாயப்பு வாத்தியார் பற்றிய முந்தைய பதிவு பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக அறிகிறோம். ‘பரமன், சாயப்பு வாத்தியார்ன்னா அந்த +2 கெமிஸ்ட்ரி வாத்தியாரா?’ என்று கேள்வி அனுப்பியிருக்கிறான் பங்காருபேட்டையிலிருந்து முன்னாள் புவனகிரி மாணவன், இந்நாள் ரயில்வே ஊழியன். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புக்கு வேதியல் எடுத்தது, ’16 வயதினிலே’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’: புவனகிரி பள்ளியில் தினமும் ‘ஷூ’ அணிந்தவர், அந்தக் காலத்திலேயே அப்படியொரு ‘ஷூ’ அணிந்தவர் என்றால் அது அவர்தான். இந்த ஊருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்பது போன்ற தோற்றம் கொண்டவர் சாயப்பு வாத்தியார். நல்ல உயரம், அது தெரியாத அளவிற்கு பருமனான உடல், நீளமான முகம். பாகிஸ்தான் முஸ்லீம்கள்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி