Monthly Archive: January 2017

பசு

கோ மாதாவாம்… குல மாதாவாம்…

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

அமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…

​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’ ‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’ ‘இரு…ளர்…கள்…!’ ‘இரூ…லழ்…கல்…!’ ‘தட்ஸ் ரைட்’ ‘ஹூ ஈஸ் தட்?’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’ :பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள்… (READ MORE)

Uncategorized

பெப்ஸியையும கோக்கையும் 

​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன்.  மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப்… (READ MORE)

Uncategorized

​பரிமேலழகர்…  

​பரிமேலழகர்…   சிறு வயது பள்ளி நாட்களில் இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர்.  தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை… (READ MORE)

Uncategorized

ompuri-1

கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

    தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

l6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:

குழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு.  அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது.  செடியிலிருந்து… (READ MORE)

Uncategorized

dangal-poster-large-listicle

‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள்.   ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி… (READ MORE)

Manakkudi Talkies

, ,