Monthly Archive: June 2021

கத்தாழை கார்த்திக்ராஜாவுக்கு மலர்ச்சி வணக்கம்

ஆன் லைன் பள்ளி வகுப்புகளை குறைந்த அளவே இணைய சேவையுள்ள சிற்றூரில் உள்ள மாணவர்கள் சாதாரன பட்டன் ஃபோனில் கவனிக்க என்ன செய்யலாம்? பெருகல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தர வேண்டிய அந்த தீர்வை, ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் தந்தால், ஒரு கல்வி ரேடியோவைத் தொடங்கி நிகழ்த்தித் தந்தால் கொண்டாடுவோம்தானே! தனது வகுப்பு மாணவர்கள் 15 பேருக்காக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அந்தப் பாடல்களை அவர்கள் இசைப்பதைக் காண்கையில் வருவது ஓர் அனுபவம்

“….  திரையிசைப் பாடல்களை திரைப்படங்களில் காட்சிகளோடு காண்பது ஓர் அனுபவம். அதே பாடல்களை அதன் இசையமைப்பாளர், பாடகர்கள் மேடைகளில் நிகழ்த்தும் போது கண்டு ரசிப்பது வேறொரு அனுபவம். சில பாடல்களை சிலர் இசைப்பதை காண்பது பேரனுபவமாக இருக்கும். மேடைகளில் அதே பாடல்களை மறு உருவாக்கம் செய்து அவர்கள் இசைப்பதை பார்க்கையில், அந்த மூல பாடலின் மீது… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

நேற்று மாலை (27.06.2021) நாம் கொண்டது நல்ல வளர்ச்சிப் பாதை.

‘பரமன், ஒரு குழப்பத்தோடே உட்கார்ந்தேன் லைவ் வளர்ச்சிப் பாதையில். எனக்கு தேவையானதை எப்பவும் குடுக்கற மாதிரி நேற்றும் அள்ளித் தந்தது வளர்ச்சிப்பாதை. எனக்காகவே எடுத்தது போல இருந்தது. நன்றி!’ ‘இது என்னது இது! எங்க வீட்டுக்குன்னே எடுத்தது மாதிரி இருக்கு!’ ‘தேவையான நேரத்தில் தேவையானதை தந்தது வளர்ச்சிப் பாதை. நன்றி பரமன்!’ ‘ஏன் நட்சத்திரம் முக்கியம்… (READ MORE)

Malarchi Maanavargal

அணில் அல்ல

அணிலால் பவர் கட் வரலாம்தான். ஆனா, இவ்ளோ பவர் கட்டுன்னா காரணம் வேற ஏதோ ‘பெருச்சாளிகள்!’தான் போல! – மணக்குடி மண்டு28.06.2021

Uncategorized

முன்னுதாரணமாக இருக்கட்டும் தலைவர்கள்

ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் என 14 கட்சித்தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு என்பது நல்ல செய்தி. அதை விட நல்ல செய்தி அவர்கள் ஒற்றுமையாக வெளியே வந்து ஊடகங்களுக்கு முன் நின்றது. இதில் சில தலைவர்கள் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்…. (READ MORE)

Politics

, , , , ,

விளையாட்டு வீரர்களுக்கு மிக நல்லது

👏👏 விளையாட்டுப் பயிற்சிகளை தருவதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி, 1 கோடி என பரிசுகள் என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.நன்று. அதை விட சிறப்பானது, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது. தற்போதைய பயிற்சிகளுக்கும் கருவிகள் வாங்கவும் பெரிதும் பயன்படும். பதக்கம் வாங்கி… (READ MORE)

Politics

இதையும் செய்யட்டும்

‘உறவினர்களை நண்பர்களை சந்திக்கும் போது வழக்கமாக உதிர்க்கும் கதாநாயக புன்னகை தற்போது முதல்வரிடம் காணப்படவில்லை. அவர் முள் கிரீடம் சுமந்து அல்லும் பகலும் உழைக்கிறார்’ என்று புதிதாக பொறுப்பேற்றிருப்கும் அமைச்சர் புதிதாகத் தொடங்கப்பட்ட சட்டப்பேரவையில் தனது உரையில் பேசியிருப்பது ஊடகங்களில் வந்தது.  நீட் பற்றியும், கொரோனா கட்டுப்படுத்தல் பற்றியும் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும்,… (READ MORE)

Politics

உடனடி கவனம் நன்று

காவலர் தாக்கி போதையிலிருந்தவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்துள்ள முதல்வரின் அறிக்கையில் இரண்டு மகிழ்வு தரும் சங்கதிகள் உள்ளன. ( உயிரிழப்பு என்பது கொடுமை, பெரும் இழப்பு. வருத்தம் என்பதை மறுக்கவே முடியாது) 1. காலந்தாழ்த்தாமல், எதிர்க்கட்சிகளும் விவாத மேடைகளும் பேசும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக முதல்வரின் கவனம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 2. போலீஸ்… (READ MORE)

Politics

மகள்கள் ஓர் அதிசயம்…

மகள்கள் ஓர் அதிசயம்… மாதாவுக்காக மாறாதவனும்மனைவிக்காக மாறாதவனும்மகள்களுக்காக மாறிவிடுகிறான்! – பரமன் பச்சைமுத்து22.06.2021பெரும்பாக்கம் #Children#LoveForChildren#Parenting#Daughters#Magal Facebook.com/ParamanPage

கவிதை

, , , , , , ,

wp-16242665057132283860693803501635.jpg

ஓகத்தை கொண்டாடுகிறேன்

ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, தசையை உறுதியாக்கும் எடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என பலவற்றை மாற்றி மாற்றி செய்து பழகுபவன் நான். யோகப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் அந்த ஒரு நிலையை வேறெந்த உடற்பயிற்சியும் தருவதில்லை என்பதை உரக்கவே சொல்வேன். உடலையும் உள்ளத்தையும் ஒரு நிலையில் ஒன்றினைக்கும் என்பதால் அது ‘ஓகம்’, அதற்கான பயிற்சிகளுக்கு ‘இருக்கை’… (READ MORE)

Uncategorized

, , , , , ,

தவறாகப் படுகிறது

சன் டிவியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடித்துக் கொள்ளும் நிகழ்வை காட்டிய வரை சிவசங்கர் பாபாவைப் பற்றி ஏதும் தெரியாது எனக்கு. பின்னாளில் நடிகர் விவேக், மயில்சாமியோடு சேர்ந்து அந்த நிகழ்வை அச்சு அசலாக பகடி செய்து நகை செய்திருந்தபடியால் அது திரும்பவும் நினைவில் வந்தது. பல ஆண்டுகள் பெங்களூருவில்… (READ MORE)

பொரி கடலை

,

புனித வன முயற்சியை புவனம் போற்ற வேண்டும்

மக்கள் வாழும் ஊரின் புறத்தே ஒரு 50 ஏக்கர் நிலத்தில் 442 வகையான தாவரங்களையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் 18 நன்னீர்க்குளங்களையும் கொண்ட ஒரு காட்டை உருவாக்கி, அதில் 291 வகையான விலங்குகள் வசிக்கின்றன, அருகி வரும் அரிய விலங்கான சாம்பல் நிற இந்திய எறும்பு தின்னி, சாம்பல் நிற தேவாங்கு, புள்ளி கூழைக்கடா, புள்ளி வாத்து,… (READ MORE)

பொரி கடலை

முத்து மாறி விட்டான்!

கண் விழிக்கும் காலை முதல்கண் துஞ்சும் நள்ளிரவு வரைகண நேரமும் மோடி நினைவே அவனுக்கு ஏழு ஆண்டுகளாக எதிர்ப்புஎதற்கும் எதிர்ப்புவடக்கென்றால் எதிர்ப்பு‘வட’ என்று வருவதால் வடைக்கும் எதிர்ப்பு சேவை வரி நிலுவைசேமியா விலையேற்றம்தடுப்பூசி  தருதல்தடுப்பூசி பற்றாக்குறைதடுக்கி எவரும் விழுதல் பால் விலையேற்றம்பாத்ரூம் குழாய் துடைப்பம்பாடத்திட்டம்பாதசாரிகள் பேண்டமிக் காலம் எது நடந்தாலும் மோடிஎது நடவாவிட்டாலும் மோடி ஒரு… (READ MORE)

Politics

,

wp-1623941308603.jpg

பாதி தட்ட இட்லி போல்

மைசூரு ‘தட்ட இட்லி’யைசரிபாதியாக கத்தி வைத்து நறுக்கிஇருட்டில் எறிந்தது போல்,வானத்தில் நிலா!…. இளையராஜா இசையில் பவதாரணி பேசுவது போலவே பாடிய அந்த பாடலை இளம் இரவின் நிலவை நோக்கிப் பாடுகிறேன், நான்! ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற?இளநெஞ்ச தொட்டு தொட்டு ஏன் தாக்குற!’ பரமன் பச்சைமுத்துஅண்ணா நகர்17.06.2021 Moon ChennaiSky EnveettuJannal Ilaiyaraja… (READ MORE)

பொரி கடலை

, ,

அம்மா இதோ இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன்

கீழ்த்தளத்து ரத்த வங்கியிலிருந்து செல்லிடப் பேசியில் அழைப்பு வர  கீழே ஓடி வருகிறேன். சாயிபாபா சிலையை வணங்க வந்த சுவாசக்கவசம் அணிந்த ஒரு வயதான பெண்மணி நம்மை கவனித்து விட்டு இரு கைகளாலும் வணங்கிக் கொண்டே நம்மை நோக்கி விரைந்து வருகிறார். ‘நம்மளயா கும்படறாங்க!’ ‘பரமன் பச்சைமுத்து சார்!’ ‘ஆமாங்க! நீங்க?’ ‘என் பையனுக்கு கொரோனா… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16238166260836095598387423334784.jpg

வீடென்பது…

வீடென்பது வெறும் கட்டிடமல்ல. உண்மையில் வீடு என்பது நான்கு சுவர்களுக்கும் தரைக்கும் தளத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றிட வெளி. ஒன்றுமில்லாத அந்த வெற்றிட வெளி, சிறிதும் பெரிதுமாய் நாம் வாங்கி நிரப்பும் திடப் பொருள்களைத் தாண்டி, அங்கே வாழும் வாழ்ந்த கணங்களாலேயே நிரப்பப்படுகிறது. கல்வி கற்ற தருணங்கள், பணியில் சேர்ந்த பொழுதுகள், புதிய முயற்சிகள் செய்த காலங்கள்,… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

சிறந்த செயல்பாடு : வார் ரூம்!

மலர்ச்சி மாணவரொருவரின் குடும்பம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால்…. மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் ஒருவரோடு வந்து நிற்கின்றனர். முழு கவச உடை அணிந்த அந்த மருத்துவர், தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை வீட்டின் உள்ளேயே வந்து பரிசோதித்து, நிலையறிந்து அடுத்து செய்ய வேண்டியவற்றையும்… (READ MORE)

Politics

, , , ,

மொத்த வீடும் பெட்டிகளில்

10 ஆண்டுகளுக்கு முன்பு,20.05.2011 அன்று பெங்களூர் மந்த்ரி வுட்லண்ட்ஸ் வீட்டை காலி செய்த போது பள்ளிச்சிறுமிகளாக இருந்த என் மகள்கள், ‘Appa, they made our houses into boxes’ என்றார்கள். இன்றும் அதே நினைவு. மொத்த வீட்டையும் பெட்டிகளில் நிரப்பி, ஒட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். ஆர் ஏ புரத்திலிருந்து அண்ணா நகருக்கு குடி… (READ MORE)

பொரி கடலை

தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார்கள் மக்கள்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாகத் தரப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை பாராட்டுதலுக்கு உரியது. எவ்வளவு அச்சங்களை பலர் கிளப்பிய போதும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லா ஊரிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட பெரும் வரிசையில் நிற்கிறார்கள் என்பது நல்ல செய்தி். முதலில் நடுவனரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை என்று தொடங்கி,… (READ MORE)

Politics

மேகமலை புலிகள் காடு காக்கப்படட்டும்

ஒரு பக்கம் கோவை மாவட்டம் கல்லாறு பகுதியின் யானை வலசைப் பாதையிலுள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை காடாக அறிவித்து காடுகளை விலங்குகளை பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காக்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர். மறுபக்கம் சத்தமில்லாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலய காடு பகுதியில் சாலை அமைக்கும் வேலைகள் நடக்கின்றன. இந்த சாலை அமைக்கும் அனுமதி கடந்த ஆட்சியால்… (READ MORE)

Politics

நன்றி மாசு அவர்களே!

மருத்துவர்கள், செவிலியர்கள் உணவு உறைவிடச் செலவில் நேரடியாக இறங்கிக் கண்காணித்து இடைத்தரகர்களை நீக்கியதன் மூலம், அதே உணவு, அதே உறைவிடத்துக்கு 9 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் செய்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் மருத்துவம் –  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசு. அட்டகாசம்! நன்றி! இன்னும் இறங்கிச் செய்யுங்கள் ஐயா, இவ்வாறான முன்னெடுப்புகள் மற்ற துறைகளுக்கும்… (READ MORE)

Politics

,

அடிப்படை கேள்விகளும் ஆலோசனையும்

சேத்துப்பட்டில் காவலர்கள் – வக்கீல் பெண்மணி சம்பவ காணொளி காட்சி தீயாகப் பரவியிருக்கிறது. ‘உன் காக்கிசட்டையை கழட்டறேன் பாரு, போடா!’ என்று அந்தப் பெண்மணி பேசியது வெளியாகியிருக்கிறது. ‘வாடி போடி என்று சொன்னார்’ என்கிறார் அவர்.  முழு பதிவும் இல்லாததால் எது உண்மையான பின்னணி தெரியாது நமக்கு. ஆனால், சில அடிப்படை கேள்விகளும் ஓர் ஆலோசனையும்… (READ MORE)

Politics

16வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( வைகாசி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் சிவன் பார்க் எதிரிலும் (அங்கே, வீதியோரம் வாழும் மனிதர்களுக்கு)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை10.06.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1623298858256.jpg

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி ஒன்றில் அமிழ்ந்து கிடக்கும் உள்ளமதைஓரிரு நிமிடங்களில் மீட்டுக் கடத்திவிடும் தொலைவிலிருப்பவரை அருகிலும்அருகிலிருக்கும் போதே தொலைவுக்குமென கடத்திவிடும் ஓரிரு வாய்காஃபி உறிஞ்சல்கள் காஃபியின் கசப்புவிரும்பிகளுக்கு உவப்பு சிலருக்கு உடல் தேவைசிலருக்கு உள்ளத் தேவைபலருக்கு மணித் தேவை காஃபி ஒரு முரண்சிலருக்கு ஆசுவாசம்சிலருக்கு தளர்வுசிலருக்கு உயிர்ப்புசிலருக்கு குவியம் அதிகமருந்துவோர்க்கு அசிடிட்டிஅருந்தவேயருந்தாதவர்க்கு ஆரோக்கியம்குறைவாய் குடிப்போர்க்கு… (READ MORE)

கவிதை

, , , , ,

wp-16232446706748570732241435619494.jpg

எதிர்ப்பு சத்து உணவு – முருகைப் பொடி

அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். ‘கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!’ என்று அறிவித்தார்… (READ MORE)

Food

, , , , , , , , , , ,

ஹோமியோபதி குணப்படுத்துகிறதாமே!

‘வெளியிலிந்து செயற்கையாக ஆக்ஸிஜன் தரப்படும் போது உடலின் செல்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதில்லை. கரும்பூஞ்சை தொற்றுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆர்சனிக் ஆல்பத்தோடு சில மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்தால், கரும்பூஞ்சை வராமலே தடுக்கவும் முடியும், வந்தால் குணப்படுத்த முடியும்!’ என்று ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.  தமிழக அரசு இவர் சொல்வதை கவனித்து, உண்மைத் தன்மையை… (READ MORE)

Politics

, , , ,

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!:

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!: 1942ல் மத்திய சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு ராகுல சாங்கிருத்தியாயன் தன் பயணங் களின் ஆராய்ச்ணிகளின் அடிப்படையில் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். கடைசி இந்து மன்னரான ஹர்ஷரது கதையில், பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம், ரத்னாவளி, பிரதர்ஷிகா போன்ற நூல்களைக் குறித்தும், சீனப் பயணி யுவாங்சுவாங்… (READ MORE)

பொரி கடலை

மாநில வளர்ச்சிக் குழுவில் மருத்துவர் சிவராமன்!

👏👏 ‘மாநில வளர்ச்சிக் கொள்கை குழு’ அறிவிக்கப் பட்டு அதில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது. 👏👏👏👏 பாரம்பரிய மருத்துவம், நவீன அறிவியல் என இரண்டையும் மதிக்கும் இரண்டுமே தேவை என்று குரல் கொடுக்கும் சிவராமன் அவர்களை பொறுப்பில் வைத்ததை மிகச் சிறப்பானது என எண்ணுகிறேன். அரசுக்கு நன்றி!சிவராமன் சார் வாழ்த்துகள்!… (READ MORE)

Politics, Uncategorized

,

wp-1622818773027.jpg

முடி கொட்டுவதே இல்லை இவர்களுக்கு…

ஒரு பள்ளிச் சுவரையொட்டிய நடைபாதை மேடையில் படியும் மர நிழலில் அமர்ந்து வெறுமனே சாலையை வெறித்துக் கொண்டு இருந்தவரை, ராயப்பேட்டையிலிருந்து திரும்பும் போது பார்த்தேன். ‘யு டெர்ன்’ அடித்து எதிர்ப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு, தக்காளி சோறு பொட்டலமும் ‘மாஸ்க்’கும் எடுத்துக் கொண்டு இறங்கி அவரை நோக்கிப் போனோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணியும், வீடும்… அருமை!

👏👏நடந்தே விட்டது அது! குமுதத்தில் ‘ஸ்டாலினுக்கு கடிதம்’ எழுதியிருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகியவற்றில் இருப்பது போல எழுத்தாளர்களுக்கு மரியாதை உயர்த்தப்பட வேண்டும். எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க சேகரித்த நூல்களை இடம் இடமாக வாடகை வீடுகளுக்கு மாற்றி மாற்றி செத்தே போகிறான். பெரிய எழுத்தாளர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். பத்தோடு… (READ MORE)

Politics

, , ,

wp-16227322188062523304432770968332.jpg

நன்றி எலந்தங்குடியாரே!

வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, செய்யும் வேலையில் தன்னையே மறந்து தற்காலிக சோதனைகளை கடந்து விடும் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளை எப்போதும் எனக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. அடையாறு மலர் மருத்துவமனையிருக்கும் பிரதான சாலையையொட்டிய உள்வட்டச் சாலையில், ‘அடுத்தது யாருக்கு கொடுக்கலாம் உணவு!?’ என்ற தேடலோடு போய்க் கொண்டிருந்த நம் கண்களுக்கு அவர் தெரியவேயில்லை (ஊரடங்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

இதை நடத்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

மலர்ச்சி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும்… மலர்ச்சி வணக்கம்! ஊரடங்கின் முதல் வாரத்தில் ஒரு நாள், மயிலை குளத்தினருகே பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்திருந்த சிலரை பார்க்கையில், ‘உணவு வேண்டுமே இவர்களுக்கு!’ என்ற எண்ணம் வந்து, ‘மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்’ வழியே முன்னெடுத்ததே, ‘உதவலாமே!’ வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு விநியோகித்தல். சேர்ந்து நாம் செய்வோம் என்று அறிவித்த… (READ MORE)

பொரி கடலை

பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது.  என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின்… (READ MORE)

Politics

, , , , , ,

தமிழ் எழுத்துலகிற்கு…

‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அரசும் பொதுவெளியும் மரியாதை தருகிறது. தமிழில் சினிமா தாண்டி கலை குறிப்பாய் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை. வாடகை வீட்டில் சேகரித்த நூல்களோடு செத்துப் போகிறான் எழுத்தாளன். எழுத்தாளர்களை உயர்த்தி தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வழி செய்யுங்கள், வரலாற்றில் நிற்பீர்கள்’ என்று குமுதத்தில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்… (READ MORE)

Uncategorized

எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர். நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின்… (READ MORE)

Food, பொரி கடலை

, , , , , , ,

wp-1622621401566.jpg

உதவலாமே!: வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு

இன்று ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் மதிய உணவு விநியோகம். ‘உதவலாமே!’ – ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு வழங்க மலர்ச்சி மாணவர் நற்சங்கம் முன்னெடுப்பு. உதவி செய்த அனைவருக்கும் பிரார்த்தனைகள்! பரமன் பச்சைமுத்துவாலண்டையர் –மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்02.06.2021 Udhavalaamey LockDown LockDiwnTimes FoodForPeople Food Malarchi MalarchiMaanavargal Facebook.com/ParamanPage

Uncategorized

, , , ,

தமிழக அரசிற்கு பாராட்டுகள்

கடந்த வாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. ஆக்ஸிஜன் கிடைக்கின்றன. உள் கிராமங்களில் சில இடங்களில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சமாளிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இனி நிலைமை முன்னேறவே செய்யும். கட்சி சார்பு – எதிர்ப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தால், சமாளித்து சரியாக செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் தமிழக அரசு என்பதை… (READ MORE)

Politics

கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்! போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது. கொரோனாவை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,