Monthly Archive: March 2020

இறை நம்பிக்கையென்பது…

இறை நம்பிக்கை என்பதுஇதைக் கொடு அதைக் கொடு என்பதல்ல, கொடுத்ததை முதலில் ஏற்றுக் கொள்வது. இறைவன் மிகப் பெரியவன்! – பரமன் பச்சைமுத்து #Faith #Gratefulness #QuarantineTime #Malarchi #StayPositive #BeInTouchWithPositivity

Spirituality

விழிப்புணர்வோடு வெல்லுவோம் கொரோனாவை! :
பரமன் பச்சைமுத்து

ஹாங்காங்கில் பல ஆண்டுகள் வசித்து விட்டு இப்போது சென்னை திருவான்மியூரில்  வசிக்கும் தொழில் முனைவரான நண்பர் முத்து ரகுபதி, இன்றும் முகத்தைத் துடைக்க புறங்கையையே பயன்படுத்துகிறார்.  உள்ளங்கையை முகத்துக் கொண்டு செல்வதேயில்லை. அனிச்சை செயலாகவே அடிக்கடி கையைக் கழுவுகிறாராம்.  சார்ஸ் வைரஸ் தொற்று வந்த போது ஹாங்காங்கே எதிர்த்துப் போராடிய போது கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் – நல்ல செய்தி!

இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் தொடர்ந்த சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும்… (READ MORE)

Uncategorized

கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு

…… குத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும். Agnes Batch 47: I have got one (Kaba Sura Kudi neer). Please guide how to make the medicinal drink.….. பரமன்: கப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்). நில வேம்பு… (READ MORE)

Uncategorized

, , ,

‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயலூர் சினிமா:   ‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து   இரு மருங்கிலும் அடர் காடுகளைக் கொண்ட நெடிய மலைப்பாதையின் இரவு இருட்டை தன் முகப்பு விளக்கின் வெளிச்சம் கொண்டு ஓரளவிற்குக் கிழித்துக் கொண்டு விரைகிறது நல்ல வசதிகள் கொண்ட ஒரு கார். ‘குமரா, தூக்கம் வந்தா சொல்லு. நான்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

TCM

இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

  பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் ([email protected]) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது. ……. “   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி… (READ MORE)

Politics, Self Help

மயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்

மலர்ச்சி வணக்கம். சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல்… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

இந்தியா இரண்டு நிமிட கைதட்டல் – 22 மார்ச்

ஐந்தாக மூன்று நிமிடம் இருக்கையிலேயே கைதட்டத் தொடங்கிவிட்டனர் இங்கு பக்கத்து குடியிருப்பில். கைதட்டுங்கடான்னா, மாட்டுப் பொங்கல் கொண்டாடற மாதிரி, தட்டு கரண்டி வச்சி தட்றானுவோ இங்க சிட்டியில! நம்ம பழக்கத்துல வாய் உடனே ‘பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங கள்!’ன்னு கத்துது! 😀👏👏

Uncategorized

பசிப்பதும் பசி போக்குவதும் நன்று

சூர்ய நமஸ்காரம் போன்ற வயிற்றைப் பிழிந்து நிமிர்த்தும் சில ஆசனங்களை இரண்டு சுற்று செய்து முடிக்கும் போதே வயிறு கபகபவென்று பசிக்கும். வெறும் வயிற்றில் ஒரே மூச்சில்ல்லாமல் நிதானமாக ஒரு சிறு செம்புத் தண்ணீரை உறிஞ்சும் பழக்கம் கொண்டவன் நான். ஹெல்த் பாஸ்கட் நிறுவனரும், மலர்ச்சி மாணவருமான திருமதி சுதா கதிரவன் ‘வெறும் வயிற்றில் இதைக்… (READ MORE)

பொரி கடலை

நல்ல படங்கள் சொல்லுங்களேன்.

கேள்வி: கொரோனோ வைரஸ் பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடைக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைமில் பார்க்க நல்ல படங்கள் சொல்லுங்களேன். இது வரை வளர்ச்சியில் வி-டாக்கீஸில் சொல்லப்பட்டப் படங்களை பார்த்துவிட்டோம். பரமன்: சமீபத்தில் நான் பார்த்த நல்ல படங்கள் சிலவற்றை சொல்கிறேன். (இந்தப் படங்களின் பட்டியலை இப்போது நான் தந்தாலும், இந்த இதழ் அச்சாகி வெளிவரும் போது மார்ச் 31 ஆகியிருக்கும்…. (READ MORE)

Uncategorized

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

மருத்துவமனையில் புத்தகம்

காலையில் மருத்துவமனை வார்டின் உள்ளே நுழைகிறேன். நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் தேறி வரும் அம்மா மருத்துவமனை கவுன் அணிந்து பெட்டில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறார்.  நின்று கவனிக்கிறேன். சித்தி சொல்கிறார், ‘நேத்தி சித்தப்பா வச்சுட்டுப் போச்சி இல்ல, அந்த புக்!’ என்ன புத்தகம் என்று பார்க்கிறேன்…. (READ MORE)

Uncategorized

ரஜினி சொல்லியிருக்கலாம்

ரஜினி நிறைய சிந்தித்திருக்கிறார், வியூகம் செய்தார், கள ஆய்வு செய்தார் என்பதெல்லாம் சரி.  தனது திட்டங்களை, ஆசைகளை சொன்னதெல்லாம் நன்று. ஆனால், வரவில்லை என்றால் ‘வர மாட்டேன்!’ என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரடியாக ‘இதான் மேட்டரு!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும். ‘மக்கள்கிட்ட எழுச்சி வரணும், இல்லன்னா இது சாத்தியம் இல்ல!’ என்பதெல்லாம் சரியில்லை…. (READ MORE)

Uncategorized

,

நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

இன்றைய தினமணி முதல் பக்கத்தில் முக்கிய அரைபக்கத்திற்கு ரஜினி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  எம்ஜிஆருக்கு அன்று கட்சி தொடங்க ஏற்பட்ட தர்மசங்கடங்களையும் இன்று ரஜினிக்கு உள்ள தர்மசங்கடங்களையும் ஒப்பிட்டு விரிகிறது அந்தக் கட்டுரை. ஊடகங்கள் பரபரக்கின்றன. ரஜினி கட்சி தொடங்கினால் பாமாக, ஜி கே வாசன் ஆகியோர் அவர் பக்கம் இறங்குவர் என்பதற்காகவே, ஜிகே… (READ MORE)

Politics

, ,

wp-15836895900933147889544007306507.jpg

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

திருமணம் என்னும் நிக்கா

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’ ‘நீங்க ?’ ‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’… புரசை கார்டன் ஆயிஷா இல்லத்து ‘வலிமா நிக்கா’விற்காக அழைப்பின் பேரில் புரசைவாக்கம் பள்ளிவாசல் சென்றிருந்தேன்.  பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் அங்கீகரிக்கும் மத குருமார்களும் மௌலானக்களும் நிரம்பி வழிந்த… (READ MORE)

Uncategorized

2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

அமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! பரமன் பச்சைமுத்து 05.03.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-15830787348501990811816643332254.jpg

பெரிய பழுவேட்டரையர் சரத்குமாருடன்…

‘பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கிறோம்! சுந்தர சோழனா உங்களை பாக்க!’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்!’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா?! இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு!’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி!’ என் ஒரு கை அவரது வலக்கையைப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

மலையாளக் கரையிலிருந்து பறம்புநில பாரியின் கதை

நிலம் கொள்ள பொன் கொள்ள புகழ் பெருக்க படை கொண்டு இயற்கையை அழித்தவர்கள் தமிழ் மூவேந்தர்கள் என்று சு.வெங்கடேசன் எழுதிய போது சோழக்காதலர்கள் அதிர்ந்து போயினர். ஆயினும் பறம்பின் பாரியை தோழமையின் கபிலரை குறிஞ்சி நில இயற்கையில் அவர் நனைத்துக் கொடுத்த விதம் நெஞ்சில் இறங்கி நின்றது (இன்னும் நிற்கிறது!). ராபர்ட் டௌனி ஜூனியரின் உருவத்தில்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,