Monthly Archive: October 2016

நிலமடந்தைக் கெழில் ஒழுக நீர் வேண்டும்…

பனிப்பொழிவால் தள்ளிப் போன எங்கள் பருவமழையே வா!  நிலமடந்தைக் கெழில் ஒழுக… நீர் வேண்டும் அல்லவே! நீர் வேண்டும் அதனால் ‘நீர் வேண்டும்’  வா!  அண்டை மாநிலங்கள் தரமறுப்பதை ஆண்டவன் தருவானென்று தெரியும்,  அரிய நீரே வா, ஆற்றாமை தீர்க்க வா! ஒரு மாதத்து மழையை ஒரே நாளில் மதம் பிடித்து கொட்டாமல், இரண்டோ மூன்றோ… (READ MORE)

Uncategorized

தவம் ஒரு வகையில்…

​பண்டிகை முடிந்து பல ஊர்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பெரும் போக்குவரத்தில்  கண்ணிமைக்காமல்  கால் நீட்ட கார் விட்டிறங்காமல் குடும்பத்தினரை பாதுகாப்பாய் கொண்டு சேர்க்க  பல மணி நேரங்கள் கார் ஓட்டி வருவதும் ஒரு வகையில் தவமே! வணக்கம் சென்னை! 

Uncategorized

‘கொடி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒருவன் பயந்தவன் மற்றவன் பலமானவன் அவன் இடத்தில் ஒருநாள் இவன் என்ற அதே அரதப்பழசான கதையில்,  அப்பாவின் ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலனும் சொந்த ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலியும் அரசியல் காய் நகர்த்தலில் எதிரெதிராய் நின்றால் ‘உயிர்’க் காதல் என்னவாகும் மனித மனம் எப்படி இயங்கும் என்றொரு புதுக் கதையை பின்னி இணைத்து களம்… (READ MORE)

Uncategorized

காட்டு ஐயனார் கோவில்…

​ஊருக்கு வெளியே காவல்தெய்வங்களாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் எல்லைச்சாமிகளை பார்த்திருக்கிறீர்களா? காடுகள் அல்லது மரங்களடர்ந்த பகுதிகளில் தனியாக வைக்கப் பட்டுருப்பவை அவை. ‘ஐயனார் ராத்ரியில் குதிரையில வேட்டைக்குப் போனாரு…’  ‘கருப்பு தொரத்துது!’ போன்ற கட்டுக் கதைகளையும், யூகங்களையும் காலங்காலமாக சேர்த்து வைத்திருக்கும் பிரதேசங்கள் இவை.  சிலைவழிபாடு, தெய்வம் என்பதைத் தாண்டி பயம் தரும் விஷயம் என்பதால்… (READ MORE)

Uncategorized

கீழடி – ஏன் அவசரமாய் மூட வேண்டும்?

​எதிரியமாக ஒரு பதிவிடுகிறேன் என்று எனக்கே நெருடுகிறது என்றாலும் இடவே செய்கிறேன். தொல்லியல் துறைக்குக் கிடைத்த புதையல் குவியல் ஒன்றை திறந்து பார்த்துவிட்டு தீயிட்டுக் கொளுத்துவார்களா யாரேனும், கொளுத்தி மண் மூடி புதைப்பார்களா எவரேனும். செய்கிறார்களே! அகழ்வாராய்ச்சி செய்து அரிய புதையல்களை கண்டெடுத்தனர் கீழடியில். சிந்து சமவெளிக்கு முன்னரே முந்து தமிழ் நாகரீகம் இருந்ததன் சான்றுகள்… (READ MORE)

Uncategorized

வரட்டும் ‘வேள் பாரி’

​ சு. வெங்கடேசன் இருக்கும் இடத்திலிருந்தே நம்மை பச்சைமலைத் தொடருக்கும், வேட்டுவன் பாறைக்கும் கடத்திப் போய் விடுகிறார். மணியம் செல்வம் பறம்பு மலை வீரனையும், கபிலரையும் காட்சிப் படுத்தி உயிர் தந்துவிடுகிறார். ‘வேள் பாரி’ இன்னொரு ‘பொன்னியின் செல்வன்’ ஆகுமா தெரியாது. ஆனால், தமிழ் உலகின் தலைமுறைகள் கடந்து தாக்கத்தை உருவாக்கும். இதைத்தான் பெரும் ஊடகங்கள்… (READ MORE)

Uncategorized

இருட்டில் இருந்திருக்கிறீர்களா…

​இருட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை இதில். கண்கள் இருட்டுக்குப் பழகி, மெதுவே பொருள்கள் புலப்பட்டு, பின்பு அவை மறைந்து நாம் மட்டுமே இருக்கும் உணர்வு அது. பார்வை உண்டு ஆனால் பொருள்கள் மறைந்து நீங்கள் மட்டுமே இருக்கும் அதிசயம். உலகம் பற்றிய பிரஞ்ஞை எதுவும்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே சாம்பிராணி…

​இவ்வளவு அதிகாலையில் எழுந்து ஊர் வயல்வெளி வாய்க்கால் என எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டது யார்!  அட… பனி!  (மணக்குடி – சிதம்பரம் வழித் தடம் நெடுக) பரமன் பச்சைமுத்து 21.10.2016

Uncategorized

நல்ல நதி நாளை வரும்…

​வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லைதான். கொள்ளை கொண்டதை தள்ளிக் கொண்டு போக அவன் பயன்படுத்தி பின் தந்துவிட்டுப் போன உன்னத நீள நீர்வழித் தடத்தை சாக்கடையாக்கி நாறச் செய்துவிட்டோம்.  நல்லதையே சாக்கடையில் வீசக்கூடாது, நாம் நல்லதில் சாக்கடையையே கொண்டு வந்து விட்டுவிட்டோம். திரும்பவும் இது ஓர் நதியாகி, இதன் வழியே நீர்ப் போக்குவரத்து… (READ MORE)

Uncategorized

தேவதைகளின் அருகில்…

​தேவதைகளின் அருகாமையிலிருக்கும் தருணங்களில்  அசுரன்கள் கூட அழகாகி விடுகிறார்கள்! ( நான், என் மகள்களோடிருக்கும் தருணங்களைப் பற்றிக் கூறினேன்)

Uncategorized

‘ஸல்லி’ –  திரை விமர்சனம்

விமானப் பயனம் என்பது மற்றப் பயணங்களைப் போலல்ல.  ட்ரெயினில், காரில், பேருந்தில், கப்பலில் என எதில் இஞ்சின் பழுதடைந்தாலும் குறைந்த சேதங்களோடு நிறுத்தி இருப்பவர்களை காப்பாற்றி விடலாம். உயரப் பறக்கும் விமானத்தின் நிலை அப்படி இல்லை. பழுதானால் விழ வேண்டியதுதான். விழுந்தால் முடிந்தது கதை. அப்படி நூற்றைம்பத்தியைந்து பேரை அவர்களது கனவுகளோடு சேர்த்து சுமந்து உயரப்… (READ MORE)

Uncategorized