Monthly Archive: October 2022

டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர். கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும்,… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 32வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை15.10.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி. சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே…

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே சுற்றியிருக்கும் பெண்களெல்லாம் என்னையே பார்க்க ஒரேயொரு ஆணாகவெட்கமின்றி நிற்கிறேன் .. .. .. … மகள்கள் ஆடை அணிந்து பார்க்கிறார்கள் உள்ளே!  #Shopping – பரமன் பச்சைமுத்து02.10.2022

ஆ...!

என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸 இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு. நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’… (READ MORE)

பொரி கடலை