
அக்னி நட்சத்திர வெய்யிலில்
அக்னி நட்சத்திர வெய்யிலில் அடுப்பைப் பற்ற வைத்து சத்துமாவைக் கொதிக்க வைத்து உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி இறக்கி கஞ்சியாக்கும் போது… மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது! #மனைவி ஊரில் இல்லை.
அக்னி நட்சத்திர வெய்யிலில் அடுப்பைப் பற்ற வைத்து சத்துமாவைக் கொதிக்க வைத்து உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி இறக்கி கஞ்சியாக்கும் போது… மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது! #மனைவி ஊரில் இல்லை.
In the journey of life, there may be people who speak bad at the back and smile in the front. It is how they are! People understand based on their level. Check – what you are doing is good and… (READ MORE)
இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே… (READ MORE)
வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.
கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம். (‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?) சிறுவயதிலேயே… (READ MORE)