Monthly Archive: March 2022

wp-1648475879805.jpg

ஆர் ஆர் ஆர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

1920களில் பிரித்தானிய ஆதிக்க இந்தியாவில், தன் லட்சியத்தை அடைவதற்காக காடு மலை ஆறு என பலதையும் கடந்து பயணித்து வந்த ஒரு மலைவாழ் பழங்குடி இன மனிதனும்,  தன் குடும்பமே சிதைந்து போய் விட ஊர் மக்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டு புறப்பட்ட தன் லட்சியத்தை அடைவதற்காக எந்த வழியிலும் பயணிக்கலாமென செயல்கள் புரியும் கோதாவரி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து?

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா? உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம்.  ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸 இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று. உலகில் முதன் முதலில்கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆம் ஆத்மியின் சின்னமோ

ஹாரி பார்ட்டரின்துடைப்பமோ பஞ்சாபில் வென்றஆம் ஆத்மியின் சின்னமோ குனிந்து நிற்கும்முள்ளம்பன்றியின் முதுகோ சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்தஉள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்! வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ! 樂 – பரமன் ( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு… (READ MORE)

ஆ...!, கவிதை

ஆனை ஆனை அழகர் ஆனை

சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை) இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே… (READ MORE)

பொரி கடலை

வசுதேவனுக்காக நண்பன் கம்சன்!?

பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது  என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன்… (READ MORE)

பொரி கடலை

, ,

25ஆவது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை10.03.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1646903254254346934298526907611.jpg

ஆண்ட்ராய்டு பாட்டி

‘அத்தை! இது என்ன சட்னி!?’ என் மனைவியின் அம்மாவான, என் அப்பாவை அண்ணன் என்று விளித்த அத்தை, பைபாஸ் சர்ஜரி, கல்லீரல் செயலிழப்பு காரணங்களால் மாமா இறந்ததிலிருந்து எங்களோடுதான் வசிக்கிறார். அத்தைக்கு வயது 75. என் வீட்டில் அதிகாலைப்பறவைகள் என்றால் நானும் அத்தையும்தான். மற்றவர்கள் எழும் முன்னே எழுந்து ‘மெட்ராஸ் மில்க் ஏ2 மில்க்’ பாட்டிலை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மனோஜ்பவனில்

டிரைவருக்கு காலையுணவு, நமக்கு காப்பி!’ என்ற முடிவோடு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பாலம் கடந்து நிறுத்தி மனோஜ் பவனில் நுழைந்து, ஓர் இருக்கையில் ( ஓரிக்கை அல்ல, அது பெருமாள் இருக்கும் இடம்) அமர்ந்து, ‘சுடு தண்ணீர், காப்பி… பில்லு அந்த டேபிள்ள சாப்பிடறாரு பாருங்க அவர்ட்ட!’ என்று டிரைவரை காட்டி ஆர்டர் தருகிறேன்…. (READ MORE)

MALARCHI

, ,

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,