கேள்வி ஒன்று

உள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார்? எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது?
எண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள்.  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களிலும் உள்நாட்டில் எண்ணெய் விலை குறையவேயில்லை. பொருளாதாரக் காரணம் ஏதும் இருக்கலாம் போல.

ஒரு கேள்வி வருகிறது எனக்கு.

‘தினமும் பெட்ரோல் விலையைத் தீர்மானித்தும் உயர்த்தியும் வந்த நிறுவனங்கள், பீகார் தேர்தலின் போது அந்த இரு வாரங்கள் மட்டும் உயர்த்தாதது ஏன்?’ என்பதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

– மணக்குடி மண்டு
13.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *