நல்லதைப் பாராட்டுவோம் – பெருங்குடி ஏரி காக்கும் பேரார்வலர்கள்…

Perungu

Perungu

இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள்  ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள்.  பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள்.

ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள்.

பெய்யெனப் பெய்த பேய் மழையில் சென்னையின் ஏனைய பகுதிகள் மிதந்த போது பெருங்குடி மட்டும் தப்பித்தற்குக் காரணம் அன்றைய தமிழனின் ஆழ் சிந்தனையின் வெளிப்பாடான இந்த ஏரி.  மழையின் போது மூழ்காமல் காத்த இந்த ஏரி, வெயிலின் போது சுற்றியுள்ள ஊர்களின் தாகம் தணிக்கும்.

ஏரிகளைக் காப்பது என்பது நீர் ஆதாரங்களைக் காப்பது என்பதையும் தாண்டி ஒரு வகையில் உயிர் ஆதாரங்களைக் காப்பது.  மண்ணை, மண்ணில் வாழும் உயிர்களை, மக்களை காக்கும் செயல்.  நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம்!

உக்கடம் குளத்தில் தொடங்கியது பரவி நொய்யலை தோண்டியெடுத்தது போல்,
இது இன்னும் பரவட்டும்.  எம் தமிழகம் தழைக்கட்டும். உயிர்கள் ஓங்கட்டும், பயிர்கள் செழிக்கட்டும்!

பாராட்டுகிறோம்!  வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *