விகடன் விருதுகள்…

wpid-images1.jpg

image
அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு, சிறந்த குணசித்திர நடிப்பென்று ‘பாகுபலி’ சத்யராஜுக்கு, ரம்யா கிருஷ்ணனுக்கு என விருதுகள்  தந்தெல்லாம் எதிர்பார்த்ததே.  வி-டாக்கீஸில், முகநூலில் நாம் எழுதியவை பல ஒத்துப் போகின்றன.

டிஜிட்டல் காலத்தில் இந்தக் கதைக்கு ஃபிலிம்தான் தேவை என்று அடித்துச் சொல்லி படமெடுத்த பிசி ஸ்ரீராம் ‘ஐ’ படத்திற்கு வென்றிருப்பதும், ‘ஓ காதல் கண்மணி’யின் மூலம் வென்றுள்ள வைரமுத்து, ஏ ஆர் ரஹ்மான் வென்றிருப்பதும் ‘அட… நம்மாளுங்க ஜெயிச்சிட்டாங்க!’ என்ற உணர்வை தந்தது.
(இந்த வருடத்தின் ஆளுமைகளில் ராஜாவை கௌரவித்தது, நமக்கே கிடைத்ததைப் போல இருந்தது தனி உணர்வு)

சிறந்த டிவி சேனலாக ‘பாலிமர் நியூஸ்’ அறிவிக்கப் பட்டது எதிர்பாராதது.  ‘விஜய் டிவி’ தொலைத்துவிட்டது இவ்வருடம். சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக ‘நேர்படப் பேசு’ குணசேகரன் வென்றிருந்தாலும், ‘புதிய தலைமுறை’யும், பாண்டேவை கொண்டிருக்கும் ‘தந்தி டிவி’யும் போராடும் இவ்வருடம்.  போட்டி இருக்குமிடத்தில் தரம் உயரும் வாய்ப்பிருக்கிறது.  இது நம் போன்ற நேயர்களுக்கு நல்லது. நல்லது நடக்கட்டும்!

பரமன் பச்சைமுத்து
10.01.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *