‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

புதுச்சேரியில் மலரவர் கோவிந்தராஜுலு மகன் திருமணத்திற்குப் போன இடத்தில், ‘பரமன், யு ஷுட் ட்ரை திஸ் ப்ளீஸ்!’ என்று பரிந்துரைத்தார்கள்.

வெற்றிலையில் விளக்கேற்றி நதியில் விடுவது போல் வெற்றிலையை விரித்து பீடா சங்கதிகள் இட்டு ‘பட்’டென்று பற்ற வைத்து நெருப்போடு நம் திறந்த வாய்க்குள் தள்ளுகிறார்கள். ( நம் சிவவேலன் காணொளிப் பதிவு செய்து விட்டான்)

சிலருக்கு வாய்க்குள் போகும் முன்னே அணைந்து விடுகிறது. சிலருக்கு வாய்க்குள் போன பின்பு. ஆக்ஸிஜன் இல்லாத மூடிய இடத்தில் நெருப்பு அணைந்துவிடுமென்ற அடிப்படை அறிவு ‘அவ்வை சண்முகி’ படத்துக்கு முன்பே தெரியுமென்பதால் ‘என்னதான்னு பாப்போமே!’ என்று முயற்சிக்க முடிந்தது.

ஃபயர் பீடாவை வாயின் உள்ளே வைத்து மூடிய போது, மனதின் உள்ளே ஓடிய வரிகள்…
‘நெருப்புடா…’

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி,
11.09.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *