மருத்துவமனையில் புத்தகம்

காலையில் மருத்துவமனை வார்டின் உள்ளே நுழைகிறேன். நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் தேறி வரும் அம்மா மருத்துவமனை கவுன் அணிந்து பெட்டில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறார்.  நின்று கவனிக்கிறேன்.

சித்தி சொல்கிறார், ‘நேத்தி சித்தப்பா வச்சுட்டுப் போச்சி இல்ல, அந்த புக்!’

என்ன புத்தகம் என்று பார்க்கிறேன். நாம் எழுதிய புத்தகம்தான். நூலின் தலைப்பு,  அம்மாவின் மனநிலையாகவே பட்டது எனக்கு.

அது, ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டுள்ள எனது 12வது நூல்…

“உறுதியோடு உயர்வோம்!”

– பரமன் பச்சைமுத்து
குளோபல் ஹாஸ்பிட்டல்,
சென்னை
15.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *