பயிர்கள் அழுகுகின்றன

தீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை.

நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம்.

விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர்.

மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில் நாமம் இட்டு அதை தெருவில் மழையில் கிடத்தி துயரத்தோடு வேண்டுகிறார் மழை நிற்கட்டுமென.

பல ஆண்டுகள் காய்ந்து கெடுத்த வானம், இவ்வாண்டு பெய்ந்து கெடுக்கிறது விவசாயப் பயிர்களை.

இறை உதவி செய்யட்டும்!

#Manakkudi
#Keezhamanakkudi
#Farmers

– பரமன் பச்சைமுத்து
சென்னை
12.01.2021

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *