மாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை.

இந்நிலையில்,
‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும் துண்டித்து போட்டது நாங்கள்தான். இவை எனக்கு திருப்தியளிக்கின் றன. இந்த சிலைகள் வெறும் கற்கள். கிறிஸ்து வில்லேஜ் என்ற அமைப்பின் மூலம் கிராமத்து இந்துக்களை மதம் மாற்றுவதே எங்கள் குறிக்கோள்!’ என்று இணையத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் காக்கிநாடா பாதிரியார். கைது செய்யப் போன காவலர்களை தாக்கியும் உள்ளனர். அதன் பின்னர் சிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

காக்கிநாடாவில் பள்ளியும் கல்லூரியும் நடத்தும் தேவாலயப் பாதிரியாராம் அவர். இருக்கட்டும். அவரது இயக்கத்தில் 3642 பாதிரியார்கள் உள்ளனராம். இருக்கட்டும். இதுவா இறைமை அடையும் முறை!?

‘இறையை அடைய இது முறை’ என பாதையையும் முறைகளையும் காட்டுவதே மதங்கள். ஒரு முறையை பின்பற்றிப் பயணிப்பதால் அடுத்த மாற்று முறையை இகழ வேண்டியதில்லை. அதுவும் இந்தியா போன்ற பல நம்பிக்கைகள் கொண்ட நாட்டில் மாற்று மதத்தினரின் வழிபட்டு தலங்களை தெய்வ உருவங்களை சிதைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

எந்த மதத்தினராக இருந்தாலும் மாற்று மத வழிபாட்டுத் தலங்களை, அதுவும் 699 வழிபாட்டு தலங்களை உடைத்து நாசப்படுத்துவது சரியில்லையே! ஆண்டாண்டுகளாக மக்கள் பூசித்தும் வணங்கியும் வந்த இமூலவர் சிலைகளை உடைத்து வெளியில் வீசுவது எவ்வளவு பெரிய கொடுஞ்செயல்!

ஏன் இதை எந்த அரசியல் கட்சிகளும் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை என்பது என் கேள்வி. மதச்சார்பின்மை என்றால் இந்நேரம் குரல் வந்திருக்க வேண்டுமே. ஒரு வேளை சிறுபான்மை மதத்தினர் வழிபடும் தலங்களில் இரண்டு இடங்களில் ஏதேனும் லேசான தாக்குதல் நடந்திருந்தால் கூட இந்நேரம் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பற்றியெரிந்திருக்கும் எதிர்ப்பு.

மதச்சார்பின்மை என்றால் இந்நேரம் குரல் வந்திருக்க வேண்டும். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், சிந்தி, சீக்கியம் என ஒவ்வொரு மதமும் ஆழமான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறது. இவற்றில் ஒருவர் கொள்ளும் மதம் எதுவாக இருந்தாலும் மாற்று மத நம்பிக்கைகள் மதிக்கப் பட வேண்டும்.

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *