நல்ல படங்கள் சொல்லுங்களேன்.

கேள்வி: கொரோனோ வைரஸ் பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடைக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைமில் பார்க்க நல்ல படங்கள் சொல்லுங்களேன். இது வரை வளர்ச்சியில் வி-டாக்கீஸில் சொல்லப்பட்டப் படங்களை பார்த்துவிட்டோம்.

பரமன்: சமீபத்தில் நான் பார்த்த நல்ல படங்கள் சிலவற்றை சொல்கிறேன். (இந்தப் படங்களின் பட்டியலை இப்போது நான் தந்தாலும், இந்த இதழ் அச்சாகி வெளிவரும் போது மார்ச் 31 ஆகியிருக்கும். நீங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் காலவரையரை முடிந்திருக்கும். இருப்பினும் எழுதுகிறேன். முகநூலில் பக்கத்தில் பதிவேற்றியும் வைக்கிறேன்)

1.       ‘மேற்குத் தொடர்ச்சி மலை’

வேலை பளுவின் இடையிடையே கொஞ்சம் கொஞ்சம் என மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டு பார்த்தேன். என்னை அசர அடித்த படம். படம் பின்னப்பட்ட விதமும், அதில் வரும் பாத்திரங்களும் (கிராமத்து மனிதர்கள் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள் – எச்சரிக்கை), கண் முன்னே விரியும் காட்சிகளும் அருமை. உற்றுக் கவனித்தால் மேற்குத் தொடர்ச்சி மலையே ஒரு கதாபாத்திரமாக நிற்பது தெரியும். இளையராஜாவின் பின்னணி இசையும் மேற்குதொடர்ச்சி மலையை அவர்கள் காட்டும் விதமும் நம்மை அங்கே கொண்டு சென்று விடுகிறது. நிறைய விருதுகள் வாங்கிய திரைப்படம். இவ்வகை படத்தை எல்லோருக்கும் ரசிக்க மாட்டார்கள். நல்ல படம்.
 
2.       ‘கேடி என்கிற கருப்புதுரை’

பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து முடித்த ஒரு முதியவன் பிள்ளைகள் தன்னைக் கைவிட்டு விட்டார்கள் என்று துவண்டு குமுறிக் கிளம்புகையில் அவர் வயதிற்குச் சம்மந்தமே இல்லாத ஒரு சிறுவனை சந்திக்கிறார். அதன் பிறகு இருவர் வாழ்வும் மாறுகிறது. அந்த சில நாட்களில் வாழ்க்கையை வாழ்கிறார் அந்த முதியவர் என்னும் கதை கொண்டு உணர்ச்சிகரமான இந்தப் படத்தை மதுமிதா என்னும் பெண் இயக்கியுள்ளார். இதுவும் விருதுகள் குவித்த படம்தான், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும், பாருங்கள்.
 

 #ValarchiBathilkal
#ValarchiTamilMonthly

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *