Yearly Archive: 2019

ஆளுயர தட்சிணா மூர்த்தி

பார்த்து விட்டு சட்டென்று கடக்க முடியா ஓர் அழகு அல்லது அமைதி அல்லது இரண்டும் கொண்ட ஒரு தட்சிணா மூர்த்தியை பார்த்தேன் இன்று, சிதம்பரம் கோவிலில். மற்ற இடங்களில் இருப்பது போலவே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு காலின் மீது போட்டு அமர்ந்திருக்கும் அதே உருவகம்தான். ஆனால், இது பிரமிக்க… (READ MORE)

Uncategorized

20190113_2249318551722713569734407.jpg

பொங்கலுக்கு மணக்குடியில் நான்!

பால் நிலவொளியில் பனியிறங்கிக் குளிர்ந்து விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள் எட்டு மணிக்கே இரவு உணவை முடித்து ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர் எலந்தாரிப் பையன்கள் எல்லாம் பிழைக்கப் பட்டினம் போனதால் இரவு இன்றும் இரவாகவே இருக்கிறது எங்களூரில், எந்த தொலைக்காட்சி வந்த போதும்! பொங்கலுக்கு மணக்குடியில் நான்! – பரமன் பச்சைமுத்து மணக்குடி 13.01.2019

Uncategorized

இந்தப் பிள்ளைகளின்  வாழ்வு மேம்படட்டும் இன்னும் இன்னும்…

முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் வியர்க்காத, காலை எட்டே முக்கால் மணிக்கும் ’17 டிகிரிதான் இங்க, போவியா!’ என்று குளிர்ந்து நிற்கும் ஓசூரின் சிப்காட்டையொட்டிய ஒரு பிசினஸ் ஹோட்டலில் காலை உணவை உண்ணப் போனவன், அதன் மெனுவைப் பார்த்து அசந்து நின்றேன். ஆங்கிலத்தில் ‘அக்காரவடிசல்’ என்றெழுதியிருந்ததைப் பார்த்து பொங்கி வந்த ‘ஆண்டாள்’ நினைவுகளையும் தாண்டி… (READ MORE)

Uncategorized

பேட்ட 1

‘பேட்ட’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘அண்ணாமலை’ படத்தின் மாஸ் டைட்டில் கார்டையே எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத் தந்திருப்பதிலும், ‘இன்ஸ்பிரேஷன், டெடிகேஷன் டு ஒன் அண்ட் ஒன்லி ரஜினி’ என்று போட்டுவிட்டு கார்த்திக் சுப்பு ராஜ்  தொடங்குவதிலுமே புரிந்துவிடுகிறது… இது ரஜினி ரசிகன் ரஜினி ரசிகர்களுக்காக செய்திருக்கும் ரஜினி படம்!  ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க!’ என்று … (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

20190109_2124342130056772036433717.jpg

மாலையில் வெள்ளை காலையில் சிவப்பு

மாலையில் வெள்ளை வெளேரென்றும் அடுத்த நாள் காலையில் ரத்தச் சிவப்பிலும் மாறும் இந்த மலரைத் தெரியுமா உங்களுக்கு? நான் சிறுவனாக இருந்த போது எங்கிருந்தோ இந்தக் கொடியைக் கொண்டு வந்து நட்டார் அப்பா. மணக்குடிக்கே இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியவர் அப்பாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். கொடுக்காப்புலியும், இந்தக் கொடியும் நான் பீற்றிக் கொள்ளும்… (READ MORE)

Uncategorized

,

அரவிந்தர் வாழ்ந்த வீடு

ந ம் வாழ்வில் நடந்தேறும் சில சங்கதிகளை எப்படி நடந்தன என்று விளக்க முடிவதில்லை, ‘எப்படி நடந்தது!’ என்று வியக்க மட்டுமே முடிகிறது. புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியும் முக்கிய கட்டிடங்களும் பல கதைகளை பொதித்து வைத்துக் கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கின்றன. ஒரு வித்தியாசமான கலவையைத் தன்னுள் கொண்ட நகரம் புதுச்சேரி. பாரம்பரியப் பழைய கடந்த… (READ MORE)

Uncategorized

சாம்பார்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக புதுச்சேரி சர்குருவில் சாப்பிட வந்த இடத்தில் சந்தித்த நண்பன் கேட்கிறான், ‘பரமன்! இது என்ன கலாட்டா? சாதத்துக்கு மட்டும்தானே சாம்பாரத் தொடுவே நீ! லட்ச ரூவாய்க் கொடுத்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ! இப்ப பொங்கலுக்குப் போயி எக்ஸ்ட்ரா கப் சாம்பார் வாங்கி விளாவி… (READ MORE)

Uncategorized

ஒதுங்குமிடத்தில் கூட கட்டமைப்பில் அசத்தல்

நட்சத்திர ஓட்டல்களின் சேவையைத் தாண்டி அங்கே இருக்கும் கட்டமைப்பும் காட்சிப் படுத்தலின் அழகுணர்ச்சியும் அவ்விடங்களின் அதீத சுத்தமும் என்னை எப்போதும் கவர்பவை. சந்திப்புகளுக்கு அரை மணி நேரம் முன்பே போய் விடும் வழக்கம் கொண்டவனாகையால் அனைத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இன்று நண்பரொருவரைச் சந்திக்க தாஜ் கோரமண்டல் சென்ற போதும் அதே அனுபவம். குடியிருக்கலாம் போன்ற… (READ MORE)

Uncategorized