இலங்கையின் வீரகேசரி வெயிட்டிருக்கும் எனது திரைவிமரிசனம்

👏👏👏👏
👍👍👍
இலங்கை நாட்டின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ‘வீரகேசரி’ வெளியிட்டிருக்கும் எனது திரை விமரிசனம்.

எனது பெயரைப் போட்டாலும் போடா விட்டாலும் தெரிந்தேயிருக்காது எனக்கு. வேறு தேசத்தில் வசிக்கும் எனக்கு ‘வீரகேசரி’ பத்திரிக்கை பார்வைக்கே வராது. எனது எழுத்துக்களை எடுத்து அப்படியே வேறு பெயரில் வெளியிட்ட, பெயரில்லாமல் வெளியிட்டவர்களைக் கண்ட வலியான தொடக்க கால அனுபவங்களைக் கொண்டவன் நான். ஒரு பத்திரிக்கையின் எல்லா பக்கங்களையும் ஒவ்வொரு வரியையும் பார்த்துப் பார்த்து செய்த போதும் ஆசிரியன் என்று போட்டுக்கொள்ள முடியாத நிலையை கண்டிருக்கிறேன். (‘எல்லோரும் உதவியிருக்கிறார்கள்!’ என்பதை மனதில் நிறுத்தி நன்றியோடு கடந்து வந்திருக்கிறேன். இன்னும் நன்றியோடு இருக்கிறேன்).

ஊடக தர்மத்தோடு செயல்படும் ‘வீரகேசரி’யை எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுகிறேன்.

மகிழ்ச்சி!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
சென்னை
27.05.2018

Facebook.com/ParamanPage

🌸🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *