முடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்

ரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது.

ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில் கல்கத்தா ரயில்நிலையத்தில் ஒன்பது மணி்நேரம் (கிட்டத்தட்ட ‘அன்பே சிவம்’ கமல் – மாதவனைப் போல) காத்திருந்த நிச்சயமில்லாத் தருணங்களின் அனுபவங்களை எழுதியிருக்கிறார். மழைச் சத்தம் கேட்டே பயந்து மழைச் சத்தம் கேட்டே சுருண்டு போய் பேச்சின்றி கிடந்தவர். அடுத்த நாள் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் தன் மீது பட்ட மஞ்சள் வெய்யிலைக் கண்டு சிலையாகி, கண்களில் நீர் வழிய சூரியனைப் பார்த்து கைக்கூப்பினாராம். அந்த நிலையத்து நடைமேடையில் விற்ற மக்காச்சோளத்தைத் தின்ற போது உலகில் கிடைக்காத பொருளொன்றைத் தின்றது போன்றொரு மகிழ்ச்சி கிடைத்ததாம்.

உண்மைதானே, உணவின் மதிப்பு, வெய்யிலின் மதிப்பு என்றில்லை, வாழ்வில் இயல்பாகக் கிடைப்பதின் அருமை அது இல்லாத போதுதானே தெரிகிறது மனித மனத்திற்கு.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
12.07.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *