அந்தரத்தில் தூக்கியெறிந்து சுழற்றி

சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற கீழே விழுந்து தலையில் அடி வாங்கினான். என்னைத் திட்டவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் அவனம்மா ( உமாக்கா) மனதுக்குள் திட்டியும் அவனை அடித்ததும் உச்சம். அதற்குப்பிறகு பிள்ளைகளை தூக்கி எறிவது குறைந்து போயிற்று.

இன்று நெய்வேலி ஹோட்டல் ராதா பார்க் வளாகத்தில் டாக்டர். ராஜலட்சுமியின் மகன் அமுதினியன் நல்லனுபவம் பெற்றான், தந்தான்.

😄🌸

பரமன் பச்சைமுத்து

நெய்வேலி

17.08.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *