பரமன் பச்சைமுத்துவின் வரிகளை பதிவு செய்த’நாம் தமிழர்’ சீமான் அவர்கள்

பரமன் பச்சைமுத்துவின் மலர்ச்சி வாழ்வியல் விதிகளை, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பயன்படுத்தினால்…!:

கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள்! மலர்ச்சி மாணவர்களுக்காக நான் எழுதியவற்றில் தேர்ழ்தெடுக்கப்பட்டவை சில. என் வளர்ச்சி விதைகள்’ நூலிலிருந்து அல்லது மலர்ச்சி காலண்டரிலிருந்து எடுத்திருப்பார்கள் போல.

‘இன்று மிக மிக மிக்கியமான நாள்…’ ‘ஒன்பது விஷயங்களை…’ ‘சிரி மனிதா… சிரி…’ என்று சீமான் படித்துக் கொண்டே போக, பலவித உணர்ச்சிகளில் விழிகள் விரிய பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
‘பரமன் பச்சைமுத்து’ என்று பெயர் சொல்லி என் படத்தைக் காட்டி முடிக்கிறார். ‘இது அவர் எழுதியது’ என்று நேர்மையாகக் குறிப்பிட்டதற்கே சீமானுக்கு என் மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
09.10.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *