ஒதுங்குமிடத்தில் கூட கட்டமைப்பில் அசத்தல்

நட்சத்திர ஓட்டல்களின் சேவையைத் தாண்டி அங்கே இருக்கும் கட்டமைப்பும் காட்சிப் படுத்தலின் அழகுணர்ச்சியும் அவ்விடங்களின் அதீத சுத்தமும் என்னை எப்போதும் கவர்பவை.
சந்திப்புகளுக்கு அரை மணி நேரம் முன்பே போய் விடும் வழக்கம் கொண்டவனாகையால் அனைத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது.

இன்று நண்பரொருவரைச் சந்திக்க தாஜ் கோரமண்டல் சென்ற போதும் அதே அனுபவம். குடியிருக்கலாம் போன்ற சுத்தம் எல்லா நட்சத்திர ஓட்டல்களின் ‘ஒதுங்குமிடம்’களிலும் இருக்குமென்றாலும், தாஜ் இன்னும் கூடுதல் மிளிர்வைக் கொண்டிருக்கிறது. புத்தம் புது நறுமணம் கொண்ட நறுமுகைகள் நிரம்பிய ஆண்கள் ஒதுங்குமிடத்தில், ‘யூரின் பாட்’டிற்கு மேலே இருந்த ஒரு ‘எக்ஸ்ட்ரா ஸ்லாப்’ கவனம் இழுத்தது.

சிறுநீர்க் கழிக்கப் போகிறவன் மொபைலை வைக்க, கையிலுள்ள புத்தகத்தை, கைப்பையை வைக்க என பல பயன்கள் தரும் வகையில் ஆனால் மிக அழகாக செய்திருக்கிறார்கள். நல்ல மலர்களை அதில் வைத்து அழகு சேர்த்திருக்கிறார்கள்.

மலர்ச்சி குடும்பத்தின் ஆர்க்கிடெட்கள், சொந்த வீடு வடிவமைப்போர்கள் கவனத்திற்கு.

பார்க்க – படம்

வாழ்க! வளர்க!

: பரமன் பச்சைமுத்து
அனீஸ் ரெஸ்ட்ராரெண்ட், தாஜ் கோரமண்டல்,
சென்னை

03.01.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *