28 ஆண்டுகள் கழிந்து…

எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து வாய் பிளக்க வைப்பதை வாடிக்கையாக செய்வதில் வல்லமை பெற்றது வாழ்க்கை. மயிலாடுதுறை அப்படி ஓர் அனுபவத்தைத் தந்து விட்டது.எல்லா ஊரையும் போலல்ல மயிலாடுதுறை எனக்கு. எம்ஜியாரால்மயிலாடுதுறை என்று மறுபெயராக்கம் செய்யப்பட்ட மாயவரத்தில்தான் நான் படித்தேன். ஏவிசி கல்லூரி வளாகமே என் கல்வி வளாகம்.’சின்ன சங்கதி… பெரிய வளர்ச்சி!’ என்ற மலர்ச்சி நிகழ்ச்சிக்கான பாஸ்கள் தீர்ந்து போய், பாஸ் இல்லாமல் நேரடியாக வந்தவர்களை அனுமதிக்கும்படி நேர்ந்தது. மலரவர்கள் எம் ஆர் சுரேஷும், சரவணனும் பம்பரமாய் சுழன்று உழைத்திருந்தார்கள்.மலர்ச்சி பயிலரங்கம் மயிலாடுதுறை மக்களையும் அழ வைத்தது, குபீரென்று சிரிக்க வைத்தது, வியக்க வைத்தது, அடியாழத்தில் வளர்ச்சி விதைகளை ஊன்றி விதைத்தது.நிகழ்ச்சியின் முடிவில்உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பற்ற நின்றவர்களைப் பார்ப்பதே ஓர் அனுபவமாக இருந்தது. வரிசையாக நின்று படம் – சுயபடமெடுத்துக் கொள்ளல், கை குலுக்கி நன்றி சொல்லுதல், கட்டியணைத்தல் என உணர்ச்சி வெளிப்பாடுகள் நடந்தன.மலர்ச்சி நிகழ்ச்சியால் உள்ளே ஊற்றப்பட்ட உற்சாகமும் பரவசமும் கொப்புளிக்க உணர்ச்சிப் பிழம்பாய் வந்து நின்றார் ஒரு பெண்மணி.’உங்களோட ஒவ்வொன்னையும், ஒவ்வொரு மூவ்வையும் கண்ணை எடுக்க முடியாம அப்படி என்ஜாய் பண்ணேன் நான். ஃபுல் என்ர்ஜியா நிக்கறேன்! தாங்க்யூ சார்!’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியைக் கவனிக்கிறேன்.ஓடி வருகிறார் மலரவர் எம் ஆர் சுரேஷ்.’பரமன் இது யாருன்னு தெரியுதா?’அந்தப் பெண்மணி ஒன்றும் புரியாமல் எங்கள் இருவரையும் பார்க்கிறார். நான் சில விநாடிகள் அவரைக் கவனித்துப் பார்க்கிறேன்.’சித்ரா…!’ என்கிறேன்.’என்ன நடக்குது இங்க! ஐயோ! என் பெயர் எப்படித் தெரியும்!’ என்று திகைக்கிறார் அவர். நெருங்கி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது கண்ணைப் பார்த்து அவருக்கு ஒன்றைச் சொல்கிறேன்.அந்தப் பெண்மணிக்கு பிரமிப்பில் தலைசுற்றுவது போன்ற உணர்வு போல. திடீர் உணர்ச்சிப் பெருக்கில் வாய் திறந்து கொள்கிறது, கண்களில் நீர் கட்டுகிறது அவருக்கு. என் கைகளிலுள்ள அவரது கைகள் சில்லிடுகின்றன.அவருக்கு பேச்சு வரவில்லை. ‘உமா மகேஸ்வரி எங்க இருக்காங்க?’ என்ற வகை கேள்விகளைக் கேட்டு அவரை இயல்புக்கு மீட்க முயல்கிறேன்.உணர்ச்சி வெள்ளத்தினூடே ‘சுரேஷ்கிட்ட உங்க நம்பர் வாங்கிக்கறேன்! நீங்க கண்டிப்பா வரனும்!’ என்று சொல்லியவாறு கைகூப்புவதா, கையசைப்பதா எனப் புரியாமல் இரண்டையும் செய்து கொண்டே விடை பெற்றுச் செல்கிறார் அவர். கண்களில் உணர்ச்சி மறையவேயில்லை. இன்று விடிந்தும் கூட அதே உணர்ச்சியில் இருந்திருப்பார் அவர், இதோ இதை எழுதும் போதும் எனக்கிருப்பதைப் போல…..அவர் சித்ரா, ஏவிசி கல்லூரியின் பேராசிரியர்… எங்களது ஆசிரியர்…..- பரமன் பச்சைமுத்துகீழமணக்குடி25.02.2019**** Malarchi App ****

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *