ரஜினி என்னும் மனிதனே…

Happy Birthday

 

Happy Birthday

 

மனிதனே…

அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு!’
என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது,
சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய்.

‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’
என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில் விசில் மட்டுமல்ல,
எங்களுக்குள்ளேயும் எதுவோ விசிலடித்தது.

‘பொம்பளைங்கள அடிக்கறவனுக்கும், பலஹீனமானவங்கள அடிக்கறவங்கனுக்கும் என் அகராதியில ‘பொட்டே’ன்னு பேரு ‘ என்று சொல்லி
அநியாயம் செய்தவர்களை துவைத்த போது, நானே அவர்களை அடி பின்னியெடுத்து ஜெயித்த ஓர் உணர்வை தந்தாய்.
‘புதுசா இருந்தாலும், பூந்துட்டா புயலா மார்ரதுதான் என் பழக்கம்’ என்று பெரிய பேட்டை தாதாவை பார்த்து நீ சொன்னது, இன்று வரை என் வாழ்வின் முக்கிய, எனக்கு நானே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் ‘பஞ்ச்’ ஆகிப் போனது.

நீ திரையில் தோன்றி சிரித்தபோது, எனக்குள் ஏதோ சிரித்தது.
நீ ஜெயித்தபோது, எனக்குள் ஓர் ‘ எஸ், எஸ் !’ என்று பாசிடிவிட்டி பொங்கியது.

கலக்டர் சார் என்பதை வேகமாய் ‘ கல்ட்அர் சார்…’ என்று நீ கடித்துப் துப்பியபோதும் கூட,
உன் வேகம் என்னை வந்து பற்றிக்கொண்டு
என் நடையை மாற்றிப் போனது.

இன்று நீ, நான், வாழ்க்கை, வளர்ச்சி, பொறுப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் என்று எல்லாமே வேறாகிப் போனது.

என்றாலும், அந்நாளில்,

இரண்டரை மணிநேரம் எங்களைக் கட்டிபோட்டு,
எங்களை மறக்கச்செய்து, உள்ளே உற்சாகம் ஊற்றி,
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்தாய். நன்றி

உன்னைப் போல் ஒருவன் இல்லை!

உன் வாழ்வில் இறையருள் பெருகட்டும், இனிமை கூடட்டும்.
நீடூழி வாழ்க !

happy brithday தலைவா !

– பரமன் பச்சைமுத்து

(Wrote this last year on Thalaivar’s Birthday)

 

Happy Birthday

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *