ஏவிசிசிபி அலுமினி் மீட் – பகுதி 1

wp-15776884944169090575625827339882.jpg

‘AVCC Polytechnic 91 Batch Alumni Meet’

ஏதோ ஓர் இடத்தில் புள்ளி வைத்து இதைத் தொடங்கி வைத்த ஜி கே வனிதாவிற்கும், முரளிப்பிரகாஷுக்கும் எங்களது நன்றிகள்!

திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என பல மைல்கள் பயணித்து வந்த தோழிகளுக்கும், அவர்களை கொண்டு வந்து விட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் நன்றிகள்.

நாளை அதிகாலை பெங்களூருக்குவுக்கு சாலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலும், இந்த சில மணி நேரங்களுக்காக நாள் முழுவதும் பயணிக்க முடிவெடுத்த சபாநாயகத்திற்கு ஒரு ‘ஸ்பெஷல் ஹக்’

கடைசி நிமிடத்தில் தகவலறிந்த போதும் ‘இது வேண்டும்!’ என்று முடிவெடுத்து பெங்களூரிலிருந்து டக்கென்று முதலில் வந்து நின்ற பாலமுருகனுக்கு ‘ஸ்பெஷல் ஹக்’!

தன்னால் முடிந்தளவிற்கு மற்றவர்களை அழைத்து வர முடிவு்செய்து முயற்சி செய்த சந்திரமௌளிக்கு நன்றி.

எவரும் எதிர்பாராத வண்ணம் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து நின்று அசத்தி நம்மையெல்லாம் உருக வைத்த அருணுக்கும், அருள்நாதனுக்கும் (மகளோடு வந்தார்) சிறப்பு பூங்கொத்து!

அன்னையார் மருத்துவமனையில் இருந்த போதும் வந்து கலந்து கொண்ட முரளிப்பிரகாஷுக்கும், தனது பன்னாட்டு வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்காகவே வந்து சவேராவில் குதித்த நம் கார்ப்பரேட் தாதா கண்ணாளன் முரளிநாராயணனுக்கும், சமீபத்தில் க்ரூப்பில் இணைந்து கலகலக்க வைத்ததோடு நேரிலும் வந்து அசத்திய முனி…நாதமுனிக்கும் (கொஞ்சம் அடக்கி வாசித்தது ஏனோ!!!), ‘நிச்சயம் வருகிறேன்!’ என்று சொல்லி அதன்படி வந்த முத்துவிற்கும், மாரியப்பன் குத்தாலம் சரவணன் என பலரையும் அழைத்து வர முயற்சித்து தவறாது வந்து சிறப்பித்த ஸ்ரீதருக்கும், ‘அதே ஆள்தான் நான்!’ என்று நின்ற அமிர்தலிங்கத்திற்கும், கடைசி்நிமிடம் வரை செந்தில் பாபுவை கொண்டு வர முயற்சி செய்து கொண்டேயிருந்த வந்து சிறப்பித்த ராஜவேலுவிற்கும் நன்றிகள்!

( தொடரும்)

: குறிப்பு 1

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
28.12.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *