காலத்திற்கேற்ப…

பெரியாரின் கொள்கையிலிருந்து பிரிந்து அரசியல் இயக்கமாக உருவான அன்றிலிருந்து திமுகவின் வரலாற்றிலேயே இது நடந்ததில்லை என்கிறார்கள்.

இறைமறுப்பு, பகுத்தறிவு என்பதே கொள்கையாகக் கொண்டதால் இதுவரை நடந்த 9 மாநாடுகளிலும் கொடியேற்றித் தொடங்குவதே தொடக்கமாக இருந்தது.

இப்போது திருச்சியில் நடந்த 10வது மாநாடு இதுவரை எப்போதும் இல்லாத முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு மங்கள இசை ஒலிக்கப்பட்டு நிகழ்ந்திருக்கிறது.

‘குத்துவிளக்கு ஏற்றுவது தமிழர் பண்பாடு, மங்கள இசையோடு தொடங்குவது நம் மரபு’ என்று கல்லாக் கட்டப் போகும் நண்பர்கள் கழக வரலாறும் வழக்கமும் தெரியாதவர்கள்.

குத்து விளக்கேற்றித் தொடங்கியதற்கு கழகத்தினரிடையேயே அதிர்ச்சியும் அதிருப்தியும் வந்ததாக செய்திகள் வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வுகளாக இதைப் பார்க்கிறோம்.

எது எப்படியாயின்… காலத்திற்கேற்ற இம்மாற்றத்தை வரவேற்கிறோம்!

  • சின்னப் பையன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *