பெரு நகர காவல் துறைக்கு மலர்ச்சி வணக்கம்!

நகரின் உள்ளே நுழையும் வாகனங்களின் பதிவு எண்ணைப் படமெடுக்குமளவிற்கும்,
விதி மீறல் வாகனங்களைக் கண்டறியும் வகையிலும் துல்லியமாகப் படமெடுக்கும் நவீன கேமராக்களை நந்தனம் சிக்னல் போன்ற இடங்களில் நிறுவி கலக்குகிறது பெருநகர காவல் துறை.

விதிகளை மீறும் வாகனங்களை தானாகவே படமெடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதிகள் கொண்டவையாம் இந்த கேமராக்கள்.  சபாஷ்!

இது போன்ற மிகத் தேவையான சங்கதிகளை முன்னெடுக்கும்  பெருநகர காவல் ஆணையருக்கும், பெருநகர காவல் துறைக்கும்…

மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *