நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

இன்றைய தினமணி முதல் பக்கத்தில் முக்கிய அரைபக்கத்திற்கு ரஜினி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  எம்ஜிஆருக்கு அன்று கட்சி தொடங்க ஏற்பட்ட தர்மசங்கடங்களையும் இன்று ரஜினிக்கு உள்ள தர்மசங்கடங்களையும் ஒப்பிட்டு விரிகிறது அந்தக் கட்டுரை.

ஊடகங்கள் பரபரக்கின்றன.

ரஜினி கட்சி தொடங்கினால் பாமாக, ஜி கே வாசன் ஆகியோர் அவர் பக்கம் இறங்குவர் என்பதற்காகவே, ஜிகே வாசனுக்கு மாநிலங்களை உறுப்பினர் என்ற செக்கைத் தேர்வு செய்திருக்கிறது எடப்பாடியாரின் அரசு.

நாளை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஜினி!

மார்ச் – ஏப்ரல் 2020ல் கட்சி என்று 8 மாதங்களுக்கு முன்பு உள்வட்டத்திலிருந்து முக்கிய ஒருவர் சொன்னார், நாம் நமது வலைதளத்தில் இதை எழுதியிருந்தோம். இப்போது வந்துள்ள செய்திகள் வேறு வகையில் உள்ளன.

கடந்த மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ‘சினிமா விஷயத்தில் நாங்கள் ஒரு முடிவெடுத்தால் அது வெளியே போவதில்லை. ஆனால், மன்றம் சம்பந்தமாக இங்கே பேசுவது வெளியே போகிறது’ என்பதில் தொடங்கி பல அதிர்ச்சிகளைத் தந்துள்ளார் ரஜினி.  

” மாற்று அரசியல், சிஸ்டம் சரி செய்ய வேண்டும் என்று தான் அரசியலுக்கே வருகிறோம். 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பதவி இல்லை. பணம் பதவி தேவைப்படுபவர்கள் வேண்டாம். நல்லது செய்ய வேண்டும், மக்கள் நலன்  முக்கியம் என்பவர்கள் மட்டுமே வாருங்கள்.  திரும்பவும் அதே திமுக அதிமுக போல செய்து விடக்கூடாது. கட்சித் தலைமையும், ஆட்சி முதல்வரும் வேறு வேறு. நான் முல்வராக இருக்க விரும்ப்வில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நடத்துவேன்.

இது உங்களுக்கு ஒத்து வந்தால் கட்சி தொடங்கலாம், நடத்தலாம்.  விருப்பம் இல்லாவிட்டால் சொல்லி விடுங்கள். ஊடகம் உலகம் பற்றிக் கவலை இல்லை எனக்கு. ‘இல்லை, சினிமாதான்!’ என்று சொல்லிவிட்டு போய் விடுகிறேன் ” என்று மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி அழுத்தமாகத் தெரிவித்ததாக செய்திகள் கசிகின்றன.

‘ரஜினில்லாம் வரமாட்டாரு’ ‘நான் அடுத்த முறை வர்றதுக்குள்ள கட்சி தொடங்கிடு ரஜினி என்றார் அத்தி வரதர்’ வகை கலாய் வரிகளை அனுப்புகிறவர்கள் பலர் உள்ளூர ரஜினி வந்து விடக்கூடாதென்றே தவிக்கின்றவர்களே.  ‘வேற்று இனம், கர்நாடகாவுக்குப் போ!’ என்று சத்தம் போடுபவர்களும், ‘நடிகனா புடிக்கும், ஆனா ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது!’ என்று சத்தமெழுப்பும் பலரும் அவர் வந்துவிடக்கூடாதென்று பதற்றில் இருப்பவர்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

‘இறங்கினால் இப்படி, இல்லாவிட்டால் இல்லை!’ என்ற நிலையில் ரஜினி என்ன முடிவெடுக்கிறார் என்பது முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தவே செய்யும்.

கவனிப்போம்!

– மணக்குடி மண்டு
11.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *