ரஜினி சொல்லியிருக்கலாம்

ரஜினி நிறைய சிந்தித்திருக்கிறார், வியூகம் செய்தார், கள ஆய்வு செய்தார் என்பதெல்லாம் சரி.  தனது திட்டங்களை, ஆசைகளை சொன்னதெல்லாம் நன்று.

ஆனால், வரவில்லை என்றால் ‘வர மாட்டேன்!’ என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரடியாக ‘இதான் மேட்டரு!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும்.

‘மக்கள்கிட்ட எழுச்சி வரணும், இல்லன்னா இது சாத்தியம் இல்ல!’ என்பதெல்லாம் சரியில்லை. மக்களிடம் நீங்கள்தான் எழுச்சி கொண்டு வரவேண்டும். எழுச்சி வந்த பிறகு நீங்கள் எதற்கு?

‘எனக்கு செட் ஆகலை. என் மனநிலை வேற. பயம் இருக்கு!’ சொல்லிட்டுப் போய்ட்டே இருந்திருக்கலாம்.

இந்தக் குரலும் உடல் மொழியும் ரஜினியுடையதாகவே இல்லை. ரஜினி மணி மிமிக்ரி மாதிரி இருந்தது. பளீர் – சுளீர் – ‘டான் டான்’ ரஜினி இல்லை.  சிஏஏ பற்றி என்சிஆர் பற்றி பேசிய ரஜினிக்கும் இந்த ரஜினிக்கும் ஏழாயிரம் கிலோ மீட்டர்கள் வித்தியாசம். குரலிலேயே தெரிந்து விட்டது… இவர் வரமாட்டார்.  வர வேண்டாம்!

நடிகராகவே இருக்கட்டும்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
12.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *