புதிய வானம் காட்டும்

தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து அழைப்பு.

….

‘பரமன் சார்.. கொரோனா பிரச்சினைல, ஏஜென்ட்ஸ் சப்ளிமெண்ட் பேப்பரே வேணாங்கறாங்க. ஞாயிறு மலர்லேருந்து எல்லாத்தையும் சுருக்கி ரெண்டு பக்கமாக்கி மெயின் எடிஷன்லே பிரிண்ட் பண்ணிடறோம்.  நீங்க நல்லா எழுதுவீங்க. இப்ப நிலைமைல பெரிய கட்டுரை வேண்டாம், போட முடியாது. சின்னதா வேணும். டைனி ஆர்ட்டிக்கிள்.  கொரோனா பத்தி் வேணவே வேணாம்!’

‘சின்னதுன்னா?’

‘நூறு வார்த்தை அல்லது ஆயிரம் கீ இன்!’

‘நாவல் எழுதினவன, ஹைக்கூ எழுதச் சொல்றீங்க!’

‘ஹஹ்ஹாஹ்.. ஆமாம் சார், நல்லதுதானே!’

‘சரிங்க, இன்னைக்கு மதியத்திற்கு அப்புறம் அனுப்பிடறேன்!’
….

தன்னம்பிக்கை தரும் பெரிய வாழ்வியல் கட்டுரையை, ஏன் எதற்கு, எப்படியென்ற விளக்கங்களுடன் அதன் சாராம்சம் குறையாமல் நூறு வார்த்தைக்குள் கொடுக்க வேண்டும், கம்பனின் அனுமன் ‘கண்டேன் சீதையை!’ என்று சொன்னதைப் போல. சவால்தான்!

எழுதியதை விட, எழுதிய பின் வார்த்தைகளைக் குறைத்து மாற்றி எழுதியது எனக்கு வளர்ச்சியைத் தந்தது.     தினமலர் (திருச்சி வேலூர் நாகை தஞ்சைப் பதிப்பு) எப்போதும் என் எல்லைகளை உடைத்து புதிய வானத்தைக் காட்டும்.

‘கட்டுரைதான சுருக்கமா டைனியா இருக்கனும்,  தலைப்ப பெரிசா வைப்போம்ல்ல!’ என்று வைத்தோமே!

‘வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் போதும் விடக்கூடாதது உடற்பயிற்சி!’

🙂

– பரமன் பச்சைமுத்து
சென்னை
01.04.2020

#QuarantineTime

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *