மரித்து எழுந்த மரியாவின் மகனே

மரித்து எழுந்த
மரியாவின் மகனே

ஞாயிறன்று உதித்தஉன் வெளிச்சம்
ஞாலத்திற்கும் பரவட்டும்

முடிந்தது என்று வருந்தியோர்
முன்னே

முகங்காட்டி உயிர்த்தெழுந்து நின்ற அன்னே

எந்நிலையிலும்  எழுதல் சாத்தியம்
எம்முள் நம்பிக்கை தோத்திரம்

முடங்கிக் கிடக்கும் இக்காலத்தையும்
முறுவலோடு கடக்கிறோம்

புத்துயிரோடு எழப்போகும் நாட்களையெண்ணி
புவனத்தினரோடு கொண்டாட!

– பரமன் பச்சைமுத்து
12.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *