மூச்சு

🌸🌸

சன்னலை அடித்துத் திறந்து உள்ளே சாரலை ஊற்றும் பெருங்காற்றோடும் பெருமழையோடும் விடிகிறது இக்காலை. சாலிகிராமத்திலிருந்து சாந்திதேவியும், ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து முத்துமாலையும் மழையை காணொளிப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள் அவரவர் மலர்ச்சி க்ரூப்புகளில்.

🌸

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வளர்ச்சிப்பாதை நேரலையின் காணொளிப்பதிவை இதுவரை 1494 பேர் பார்த்திருக்கிறார்கள்.

நெடுநாளாய் உள்ளிருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததென்றும், வாழ்வின் முக்கிய புரிதல்கள் கிடைத்ததென்றும் நன்றி பாராட்டும் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இந்த வீட்டடங்குக் காலத்திலும் உற்சாகமாக தெம்பாக நம்பிக்பையோடு் இருக்கிறோம் இந்த வளர்ச்சிப்பாதை நேரலைகளால். நன்றி பரமன்!” என்பது பலரிடமிருந்தும் தெரிவிக்கப்பட்ட வாக்கியங்கள்.

இந்த நேரத்தில் மலரவர்களுக்குத் தர வேண்டியதை தர முடிந்தது இறையருளால் என்ற ஒரு நிறைவில் விடிகிறது இக்காலை.

……

இந்த நேரத்தில் அடுத்த நிலைக்கு நகர சிலருக்கு உதவலாமே என்ற எண்ணம் வரவே, அறிவித்துள்ளோம் ‘மூச்சு’ மலர்ச்சி ஆன்லைன் வகுப்பு.

வாரத்தில் 3 நாட்கள் இரண்டு வாரங்கள் என்ற திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது ‘மூச்சு’. ( உயிர் வளர்க்கும் மூச்சு )

‘ஆகா! இரண்டு வாரம் தொடர்ந்து தொடர்பிலேயே இருப்போமே!’ என்று சொல்லியே ஒருவரும் ‘மலர்ச்சியின் எதிலும் நான் இருப்பேன், முதல் பேட்ச் ஆன்லைன் கோர்ஸ், இருப்பேனே!’ என்று சொல்லி ஒருவரும் பெயர் கொடுத்ததாக அறிகிறேன்.

பெயர் கொடுத்திருப்பவர்களோடு தொடங்கி, அவர்களுக்கு சில அடிப்படைகள் கொடுத்து, பயிற்சி செய்ய வைத்து, அதற்குப் பிறகு அடுத்த சில பேர்களை நோக்கித் திரும்பலாம் என்பது எண்ணம். இறையருள் துணை செய்யட்டும்!

பெயரைப் பதிவு செய்திருப்போருக்கு…

வாருங்கள்!
ஆழப் புரிதல் கொள்வோம்,
அடுத்த நிலை நோக்கி நகர்வோம்!
இறைவன் துணை செய்வான்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    26.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *