‘மூச்சு’ – மலர்ச்சி ஆன்லைன் கோர்ஸ்

சென்ற வளர்ச்சிப் பாதையில் ‘ஆன் லைன் கோர்ஸ்ஸஸ்’ வருகிறது என்று சொன்னது, இனி எதிர்காலத்தில் செய்யலாம் என்ற பொருளில்தான். வகுப்பு முடிந்து அன்று இரவு உறங்க வெகுநேரம் ஆனது. நள்ளிரவிற்கு மேல் பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வரும் போது சில வரிகள், சில எண்ணங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில், ‘மூச்சு’ ‘உயிர்காக்கும் மூச்சு’ ‘ஆன் லைன் கோர்ஸ்’, ‘மலரவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவினால் என்ன!’ என்ற வகை எண்ணங்கள். காலையில் வேலைகளைத் தொடங்கி மளமளவென ‘மூச்சு’ பேட்ச் 1 தொடங்கப் பெற்றது.

வகுப்பு முடிந்த இரவு ரமணியிடமிருந்து குத்தாலங்கத்திற்கு அழைப்பு, ‘நாளை மறுநாள் இரண்டாம் வகுப்பில் கலந்து கொள்ளலாமா?’ ‘புதுச்சேரி எஸ்டிகே ராஜகோபால் 06.55க்கு அழைத்தார், லாகின் கண்ட்ரோல் ஆக்சஸ் இனிமேல் போட முடியாது என்று விட்டுவிட்டோம்’ ‘என் பையன் 7க்குதான் வந்தான். அதுக்கப்புறம் சேத்துக்க முடியல. வேற வாய்ப்பு இருக்கா?’ என வரிசையாய் அழைப்புகள். குமரனிடம் சொன்னேன், ‘சரி, தேவையென்றால் நாளை இன்னொரு பேட்ச் எடுத்து விடுகிறேன்!’ இன்று அதே அளவு மாணவர்களோடு ‘மூச்சு’ பேட்ச் 2 தொடங்கப்பட்டுவிட்டது.

( நேற்றைய வகுப்பில் அமர்ந்தவர்கள், ‘வேற லெவல்ல இருக்கு. மிஸ்ஸே பண்ணாத. அது வேற பரமன், வேற மாதிரி கிளாஸு!’ என்று அழுத்திப் பரிந்துரைத்ததில் பலர் வாய்ப்பு கேட்டனர்)

பூனா, சிங்கப்பூர், புதுச்சேரி, வேலூர், திருப்பத்தூர் என பல இடங்களிலிருந்தும், மலரவர்களோடு மலரவர்கள் அல்லாத புதியவர்களும் பயிற்சி பெறுகிறார்கள். ரம்ஜான் நோன்பு முடித்துவிட்டு ஓடிவந்து வகுப்பிலமர்ந்து நெகிழச் செய்தவரும் உண்டு.

இரண்டு வார கோர்ஸ் இது. நிறைய நல்லது நடக்கும் இவர்களுக்கு. ஆழமான புரிதலோடு மாற்றம் பெறுவார்கள்.

அதற்குள் / அதற்கடுத்து அடுத்த வளர்ச்சிப்பாதை வந்து விடும்.

இறைவன் துணை செய்வான்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    28.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *