இருவீட்டார் திருமணம்

ஊரார் இல்லாமல் உற்றார் இல்லாமல்

சுற்றம் இல்லாமல் நட்பும் வாராமல்

‘இப்ப ஏன் வைக்கனும் கல்யாணத்தை’ என்றோரும்
‘இப்ப எப்படி போவறது?’ என்றோரும் எவரும் வரமுடியாமல்

பெண்ணையும் சேர்த்து பெண்வீட்டார் ஏழு பேர்

அதேயளவு மாப்பிள்ளை வீட்டாரென

அசல் ‘இருவீட்டார்’ திருமணமாக  போன திங்களன்று
நடந்தேறியதாம் சங்கரியின் திருமணம்

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் கொரோனா காலங்களிலும் நடந்தேறுகின்றன.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
04.05.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *